2 வாழைப்பழத்துக்கு ரூ. 442 வாங்குனது சரி தான்: ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம்

By Siva

Recommended Video

ஹோட்டலில் 2 வாழைப்பழத்திற்கு பில் ரூ. 442 அதிர்ச்சியில் வீடியோ வெளியிட்ட கமல் பட நடிகர்

சண்டிகர்: நடிகர் ராகுல் போஸுக்கு 2 வாழைப்பழங்களுக்கு ரூ. 442 பில் போட்டது சரியே என்று ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பாலிவுட் நடிகர் ராகுல் போஸ் சண்டிகரில் உள்ள ஜே. டபுள்யூ. மாரியட் ஹோட்டலில் தங்கியபோது இரண்டு வாழைப்பழங்கள் ஆர்டர் செய்தார். 2 பழங்களுக்கு ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து ரூ. 442 பில் போடப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பழங்கள் மற்றும் பில்லை வீடியோவை எடுத்து ட்விட்டரில் வெளியிட்டார்.

Rs. 442 for two bananas is not illegal: FHRAI

வரிவிலக்கு அளிக்கப்பட்ட பழத்திற்கு எப்படி வரி விதிக்கலாம் என்று கூறி கலால் மற்றும் விரிவிதிப்பு ஆணையர் அந்த ஹோட்டலுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் வரி விதித்தது குறித்து விளக்கம் கேட்டு ஹோட்டலுக்கு நோட்டீஸும் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் துணை தலைவர் குர்பாக்சிஷ் சிங் கோஹ்லி கூறியிருப்பதாவது,

அந்த ஹோட்டல் பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனையில் ஈடுபடவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்களுக்காக அளிக்கப்படுகிறது. சில்லறை விற்பனை கடைகளில் வாழைப்பழங்கள் குறைந்த விலையில் கிடைக்கும். ஆனால் ஹோட்டலில் பழம் மட்டும் அல்லாமல் தரமான சேவை, தரம், பிளேட், சுத்தம் செய்யப்பட்ட பழம் என்று பல சவுகரியங்கள் அளிக்கப்படுகின்றது.

சாலையோர கடையில் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் காபி சொகுசு ஹோட்டலில் ரூ. 250க்கு கூட விற்கப்படும். 2 வாழைப்பழங்களுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதித்தது சரியே. இந்த விஷயத்தில் ஹோட்டல் சட்டவிரோதமாக நடந்து கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.

என்ன பெரிய தரம் ஒரு பிளேட்டில் இரண்டு பழங்களை வைத்துக் கொடுத்துள்ளனர். இதற்காக ரூ. 442 பில் போடுவது எல்லாம் ரொம்ப ஓவர் என்று சமூக வலைதளங்களில் பேசிக் கொள்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X