நுரையீரல் புற்றுநோய்.. சினிமாவை விட்டு விலகிய நடிகர் சஞ்சய் தத்.. ரூ.735 கோடி முதலீடு என்னவாகும்?

By

மும்பை: பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மீது ரூ.734 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து மும்பை லீலாவதி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு கொரோனாவுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நடிப்புக்கு இடைவெளி

நடிப்புக்கு இடைவெளி

அதில் பாதிப்பு இல்லை என்று தெரிய வந்தது. இதுபற்றி ட்விட்டரில் தெரிவித்திருந்த நடிகர் சஞ்சய் தத், பிறகு இரண்டு நாட்களுக்குப் பிறகு வீட்டுக்குத் திரும்பினார். வீட்டிற்கு வெளியே கூடியிருந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் ட்விட்டரில் 'மருத்துவ சிகிச்சைக்காக நடிப்புக்கு இடைவெளி விட்டிருக்கிறேன். கவலைப்பட வேண்டாம், உங்கள் அன்பாலும் வாழ்த்துகளாலும் விரைவில் திரும்புவேன்' என்று கூறி இருந்தார்.

நுரையீரல் புற்றுநோய்

நுரையீரல் புற்றுநோய்

அவர் தனக்கு என்ன பிரச்னை என்பதை தெரிவிக்கவில்லை. இருந்தாலும் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதற்கான சிகிச்சைக்குத்தான் அவர் செல்ல இருப்பதும் தெரிந்ததால் பாலிவுட் அதிர்ச்சி அடைந்தது. இதையடுத்து சினிமா பிரபலங்கள் அவர் விரைவில் நலம்பெற பிரார்த்திப்பதாக சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

ரூ.735 கோடி முதலீடு

ரூ.735 கோடி முதலீடு

ரசிகர்களும் அவர் நலம்பெற பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் அவரது வருங்கால படங்களுக்காக ரூ.735 கோடி முதலீடு செய்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மகேஷ்பட் இயக்கிய சடக் 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் சஞ்சய் தத். இந்தப்படத்துக்கான டப்பிங்கை அவர் பேசி முடித்துவிட்டார். இது வரும் 28 ஆம் தேதி ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது.

டப்பிங் பேசுவார்

டப்பிங் பேசுவார்

இதையடுத்து கே.ஜி.எஃப் 2 படத்தில் மெயின் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தில் அவரை வைத்து இரண்டு காட்சிகள் எடுக்கப்பட வேண்டும். மேலும் டப்பிங் பேச வேண்டும். அவர் சிகிச்சைக்கு முடிந்து வந்த பிறகு டப்பிங் பேசுவார் என்று படக்குழு நம்பிக்கைத் தெரிவித்துள்ளது. மேலும் தோர்பஷ், பூஜ், ஷாம்ஷேரா, பிரித்விராஜ் ஆகிய படவேலைகள் முடியாமல் உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X