விலகுமா மர்மம்? சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை விவகாரம்.. ஆர்டிஓ நாளை விசாரணை!
சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் ஆர்டிஓ விசாரணை நாளை தொடங்குகிறது.
Recommended Video

கடந்த 9-ஆம் தேதி ஓட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார், சின்னத்திரை நடிகை சித்ரா.
அவர் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார் கூறினர். இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

மாறுபட்ட தகவல்
இதற்கிடையே பிரேத பரிசோதனையில், சித்ரா தற்கொலை செய்துதான் இறந்தார் என்பது உறுதியானது. சித்ராவுக்கும் - ஹேம்நாத் என்பவருக்கும் திருமணம் நிச்சயம் நடந்த நிலையில், அடுத்த மாதம் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர். ஆனால் அவர்கள் அக்டோபர் மாதம் பதிவு திருமணம் செய்ததாக ஹேம்நாத் போலீசாரிடம் கூறியுள்ளார்.

என்ன காரணம்
சித்ராவின் தற்கொலையை தொடர்ந்து ஹேம்நாத்திடம் நசரத்பேட்டை போலீசார் கடந்த 5 நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். இதில் அவர் தொடர்ந்து மாறுபட்ட தகவல்களை கூறி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் சித்ராவின் தற்கொலை முடிவுக்கு என்ன காரணம் என்பது தெரியாமல் போலீசார் தவித்து வருகின்றனர்.

அனுப்பி உள்ளனர்
சித்ரா பயன்படுத்திய செல்போனை ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். அதில் ஏதாவது தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. ஓட்டல் ஊழியர்கள் மற்றும் அங்கிருந்து சித்ராவின் உடலை எடுத்து சென்ற ஆம்புலன்ஸ் டிரைவரிடமும் போலீசார் விசாரணை நடத்த இருக்கின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ
இதற்கிடையே நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக, ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ நாளை விசாரணையை தொடங்க இருக்கிறார். முதலில் அவர் சித்ரா மற்றும் ஹேம்நாத் குடும்பத்தினரிடம் விசாரணையை தொடங்குகிறார். இதன் மூலம் இந்த வழக்கின் மர்மங்களுக்கு விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











