மூக்குத்தி அம்மன் படத்துல டெலிட் பண்ண சீனை ருத்ர தாண்டவத்துல பார்க்கலாம் போலயே.. ஸ்நீக் பீக்!

சென்னை: இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள ருத்ர தாண்டவம் படத்தின் ஸ்நீக் பீக் வெளியாகி வைரலாகி வருகிறது.

திரெளபதி படத்தை இயக்கி பெரும் சர்ச்சையை கிளப்பிய மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள ருத்ர தாண்டவம் திரைப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ரிச்சர்ட் ரிஷி ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தர்ஷா குப்தா நடித்துள்ளார். கெளதம் மேனன், ராதா ரவி, தம்பி ராமைய்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ருத்ர தாண்டவம் ஆடுமா

ருத்ர தாண்டவம் ஆடுமா

நாடக காதலை மையப்படுத்தி இயக்குநர் மோகன் ஜி இயக்கிய திரெளபதி திரைப்படம் சர்ச்சைகளுக்கு நடுவே தியேட்டர், ஒடிடி மற்றும் விஜய் டிவி என அனைத்திலும் நல்ல வரவேற்பை பெற்று ஓடியது. இந்நிலையில், மோகன் ஜியின் அடுத்த படமான ருத்ர தாண்டவம் வரும் அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ள நிலையில், ருத்ர தாண்டவம் ஆடுமா? என்ன என்ன சர்ச்சைகள் வெடிக்க காத்திருக்கின்றன என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

கன்வெர்ஷன் பிரச்சனை

கன்வெர்ஷன் பிரச்சனை

திரெளபதி படத்தில் நாடக காதல் பிரச்சனையை கையில் எடுத்த மோகன் ஜி இந்த படத்தில் இந்துக்களை வலுக்கட்டாயப்படுத்தி கிறிஸ்துவர்களாக சிலர் மதமாற்றம் செய்கின்றனர் என்கிற பிரச்சனையை கையில் எடுத்து படமாக்கி உள்ளார். ஆனால், எந்தவொரு மதத்தினரையும் தவறாக சித்தரிக்கவில்லை என்றும் மதத்தின் பெயரால் நடைபெறும் ஊழல்களை அம்பலப்படுத்தவே தான் விரும்புவதாகவும் அவர் தெளிவுப்படுத்தி உள்ளார்.

ஸ்நீக் பீக் ரிலீஸ்

ஸ்நீக் பீக் ரிலீஸ்

இன்னும் சில தினங்களில் ருத்ர தாண்டவம் படம் ரிலீசாக உள்ள நிலையில், அதன் ஸ்நீக் பீக் ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். அந்த ஸ்நீக் பீக்கில் கிறிஸ்தவ பாதிரியாராக மனோபாலா நடித்துள்ளார். ரிச்சர்ட் ரிஷி மற்றும் அவரது கிறிஸ்துவ நண்பராக தம்பி ராமைய்யா உள்ளிட்டோர் இடம்பெறும் காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

மக்களிடம் வசூல்

மக்களிடம் வசூல்

சாத்தான்களை ஒழிக்கப் போவதாக பேசும் மனோபாலா அதற்காக அந்த பிரார்த்தனை கூட்டத்திற்கு வந்திருக்கும் மக்களிடத்தில் டொனேஷன் கேட்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடைசியாக மனோபாலாவுக்கு உதவி செய்வதாக அவர் பேசிய சிடிக்களை கேட்டு ரிச்சர்ட் ரிஷி பேசுவதாக அந்த வீடியோ முடிகிறது.

மூக்குத்தி அம்மனில் மிஸ் ஆனது

மூக்குத்தி அம்மனில் மிஸ் ஆனது

மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றுவோர்கள் பற்றி பிகே, டிரான்ஸ், மூக்குத்தி அம்மன் என ஏகப்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன. அதே போன்ற ஒரு படமாக ருத்ர தாண்டவம் இருக்குமா என்பது படம் ரிலீசானதும் தெரிந்துவிடும். மூக்குத்தி அம்மன் படத்தில் டெலிட் செய்யப்பட்ட மனோபாலா காட்சியை போல ஒரு காட்சி இதில் இடம் பெற்றுள்ளதாக நெட்டிசன்கள் நோட் பண்ணி கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X