திருடுபோன அனுஷ்கா படத்தின் ரூ 1.5 கோடி நகைகள் சென்னையில்!

By Shankar

சென்னை: 'ருத்ரமாதேவி' படப்பிடிப்பில் மாயமான அனுஷ்காவின் நகைகள் சென்னையில் பதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ருத்ரமாதேவி என்ற சரித்திரப் படம் பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இதில் அனுஷ்கா ராணி வேடத்தில் நடிக்கிறார்.

ஸ்பெஷல் நகைகள்

ஸ்பெஷல் நகைகள்

அவர் அணிந்து நடிப்பதற்காக பல கோடி செலவில் தங்க, வைர நகைகள் வாங்கப்பட்டன. தலையில் அணியும் கிரீடம், கழுத்து மாலைகள், ஒட்டியானம் போன்றவை தங்கத்தால் இந்தப் படத்துக்காக செய்யப்பட்டன. அனுஷ்காவிடம் அளவெடுத்து பொற்கொல்லர்கள் இவற்றைத் தயார் செய்தார்களாம்.

அனுஷ்கா

அனுஷ்கா

ஹைதராபாத்தில் அரண்மனை அரங்கு அமைத்து அதற்குள் நடந்த படப்பிடிப்பில் அனுஷ்கா இந்த நகைகளை அணிந்து நடித்தார். ஒவ்வொரு காட்சியிலும் அவர் நடித்து முடித்ததும் நகைகளை உதவி இயக்குனர்களிடம் கழற்றி கொடுத்து விடுவார். அவை பெட்டிக்குள் வைத்து பூட்டி ஒரு அறைக்குள் பத்திரமாக வைக்கப்பட்டு வந்தன.

பொட்டிய காணோம்..

பொட்டிய காணோம்..

இப்படி வைக்கப்பட்ட நகைபெட்டிகள் திடீரென ஒரு நாள் காணாமல் போய்விட்டன. இதனால் படப்பிடிப்பு குழுவினர் பெரும் அதிர்ச்சியடைந்தார்கள். நகைகள் திருட்டு போனது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் படப்பிடிப்பு குழுவை சேர்ந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

படப்பிடிப்பு ரத்து

படப்பிடிப்பு ரத்து

தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. திருட்டு போன நகைகள் கிடைத்தால்தான் அனுஷ்கா மீண்டும் ராணி வேடத்தில் நடிக்க முடியும் என்ற சூழ்நிலை.

சென்னையில்...

சென்னையில்...

இந்த நிலையில் திருட்டு போன நகை பெட்டிகள் சென்னையில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து ஹைதராபாத் போலீசார் சென்னை வந்துள்ளனர். இன்று இரவுக்குள் நகைகள் மீட்கப்படும் என்று போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X