Rudhran : வந்த வேகத்தில் ஓடிடிக்கு வந்த ருத்ரன்..எப்போது தெரியுமா?

சென்னை : நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ருத்ரன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

தமிழ் புத்தாண்டு அன்று தியேட்டரில் வெளியான திரைப்படம் ருத்ரன்.

இதில் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், நாசர், பூர்ணிமா பாக்யராஜ், காளி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர்.

Rudhran film to stream on Sun NXT on May 14

ருத்ரன் : டான்ஸ் மாஸ்டர், நடிகர்,இயக்குநர் என பன்முகத்திறமை கொண்ட ராகவா லாரன்ஸ் கடைசி காஞ்சனா 3 படத்தில் நடித்திருந்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த திரைப்படமும் வெளியாகத நிலையில் ருத்ரன் கடந்த மாதம் வெளியானது. பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களை தயாரித்த ஸ்டார் கதிரேசன் இப்படத்தை இயக்குநராகி உள்ளார்.

சுமாரான கதை : ருத்ரன் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தில் ராகவா லாரன்ஸின் அப்பாவாக வரும் நாசர் தனது நண்பனுக்கு 7 கோடி கடன் வாங்கி தருகிறார். ஆனால், நண்பர் ஏமாற்றி விட, மனவேதனையில் நாசர் உயிரிழந்துவிடுகிறார். அப்பா வாங்கிய கடனை அடைக்க லாரன்ஸ் என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை. இப்படத்தின் கதை சுவாரசியமாக இல்லாததால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

Rudhran film to stream on Sun NXT on May 14

மிரட்டலான வில்லன் : இந்த படத்தில் வில்லன் ரோலில் நடித்திருந்த சரத்குமாரின் நடிப்பை அனைவரும் பாராட்டினர். ருத்ரன் படத்திற்கு பிறகு சரத்குமாருக்கு வில்லன் வாய்ப்பு தேடி வருவதாக அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பில் சரத்குமார் கூறியிருந்தார். அந்த அளவுக்கு அவரது ரோல் சும்மா மிரட்டலாக இருந்தது.

ஜொர்தாலயா பாடல் : வழக்கமாக தனது இசையால் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் ஜிவி பிரகாஷின் இசையும் சுமார் என்று சொல்லும் அளவுக்குத்தான் இருந்தது. அஃப்ரோ இசையில் வரும் 'ஜொர்தாலயா' பாடல் தியேட்டரில் ரசிகர்களை ஆட்டம் போடவைத்துள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஓடிடி ரிலீஸ் : கடந்த மாதம்‌ ஏப்ரல் 14ந் தேதி தமிழ் புத்தாண்டு அன்று திரையரங்கில் வெளியான இப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.இப்படம்,வரும் மே 14-ஆம் தேதி சன் நெக்ஸ்ட் தளத்தில் இந்த படம் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X