Rudhran Trailer: பாலய்யாவுக்கே டஃப் கொடுக்கும் ராகவா லாரன்ஸ்... காதுல ரத்தம் வருது சாரே!

சென்னை: ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ராகவா லாரன்ஸ் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

கதிரேசன் இயக்கத்தில் ஆக்‌ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் 14ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ருத்ரன் ட்ரெய்லரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

 Rudhran Trailer: Raghava Lawrence Rudhran film trailer is out now

ருத்ரன் ட்ரெய்லர்
ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படம் வரும் 14ம் தேதி வெளியாகிறது. கதிரேசன் இயக்கியுள்ள இந்தப் படத்தை அவரே தயாரித்தும் உள்ளார். ராகவா லாரன்ஸுடன் ப்ரியா பவானி சங்கர், சரத்குமார், இளவரசு, ரெடின் கிங்ஸி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி கவனம் ஈர்த்திருந்த நிலையில், தற்போது ட்ரெய்லர் ரிலீஸாகியுள்ளது.

நெட்டிசன்கள் ட்ரோல்
இந்த ட்ரெய்லரின் ஆரம்பம் முதலே ஆக்‌ஷனில் பொளந்து கட்டுகிறார் ராகவா லாரன்ஸ். ஆனால், அது யதார்த்தமாக இல்லாமல், பக்கா சினிமாத்தனமாக ரசிகர்களையே ஜெர்க் விட வைத்துள்ளது. தெலுங்கில் பாலய்யா காருவின் ஆக்‌ஷன் காட்சிகள் ஹாலிவுட்டுக்கே சவால் விடும். ஆனால், அவருக்கே டஃப் கொடுத்துள்ளார் ராகவா லாரன்ஸ். வில்லன்களை பந்தாடும் போது ரசிகர்களின் காதுகளில் 'உய்ய்ன்னு' சத்தம் கேட்கும் வகையில் அதகளமாக உருவாகியுள்ளது இந்த ட்ரெய்லர்.

வில்லன்களை அடித்து அந்தரத்தில் பறக்கவிடும் ராகவா லாரன்ஸ், அவர்களை கேரம் காயின்கள் மாதிரி சுண்டி விளையாடுகிறார். இந்த ட்ரெய்லரை பார்த்த நெட்டிசன்கள், "ட்ரெய்லர் பார்த்துவிட்டு படம் வெற்றி பெறுமா என்று சந்தேகத்தில் இருக்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகள்" என கமெண்ட்ஸ் செய்துள்ளனர். இன்னொரு நெட்டிசன், "தெலுங்கு ஸ்டண்ட் சீன் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 Rudhran Trailer: Raghava Lawrence Rudhran film trailer is out now

முக்கியமாக ட்ரெய்லரின் இறுதியில் ராகவா லாரன்ஸும் சரத்குமாரும் சண்டை போடும் காட்சிகள் அடேங்கப்பா ரகமாக உருவாகியுள்ளது. பெரிய இரும்பு ராடை எடுத்து சிலம்பம் சுற்றும் ராகவா லாரன்ஸ், ஒரு கிலோ மீட்டர் நீளத்துக்கு ஒரு அருவாவை எடுத்து வில்லன்களை துவம்சம் செய்கிறார். இந்த ஆக்‌ஷன் சீன்ஸ்களுக்காக ஜிவி பிரகாஷ் போட்டுள்ள பிஜிஎம், காதுகளை பதம் பார்ப்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

அதேபோல், சரத்குமாரின் கெட்டப், அவரது பாடி லேங்குவேஜும் நெட்டிசன்களால் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் ராகவா லாரன்ஸ் வழக்கம் போல டான்ஸில் தாறுமாறாக சம்பவம் செய்துள்ளார். முனி, காஞ்சானா படங்களின் சீக்வெல் போன்று ருத்ரன் திரைப்படம் இருக்கும் எனவும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X