விரைவில் ஆட்டம் ஆரம்பம்.. இயக்குநர் மோகன் ஜியின் ருத்ர தாண்டவத்திற்கு என்ன சான்றிதழ் தெரியுமா?

சென்னை: ருத்ர தாண்டவம் படம் குறித்து அசத்தல் அப்டேட்டை கொடுத்துள்ளார் இயக்குநர் மோகன் ஜி. இயக்குநர் மோகன் ஜிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வண்ணாரப் பேட்டை திரௌபதி ஆகிய படங்களை இயக்கியிருப்பவர் இயக்குநர் மோகன் ஜி. சமீபத்தில் வெளியான திரௌபதி படம், அவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது.

நாடகக் காதலை தோலுரித்துக் காட்டும் வகையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது. இதற்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும் பெரும்பாலான மக்கள் ஆதரவு தெரிவித்தனர்.

ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி

ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி

இந்தப் படத்தில் நடிகை ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி ஹிரோவாக நடித்திருந்தார். திரௌபதி படத்தில் சிலம்பம் பயிற்சியாளராக அவர் நடித்திருந்தார். இதற்கு முன்பு பல படங்களில் அவர் நடித்திருந்த போதும் இந்தப் படத்தில் தான் ரிச்சர்ட் ரிஷியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

15 கோடி ரூபாய் வசூல்

15 கோடி ரூபாய் வசூல்

குடும்பம் குடும்பமாக சென்று பார்த்ததால் தியேட்டர்கள் களைகட்டின. இதனால் 50 லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் 15 கோடி ரூபாய் வரை வசூலை குவித்தது. படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

சமூகம் சார்ந்த பிரச்சனைக்கு குரல்

சமூகம் சார்ந்த பிரச்சனைக்கு குரல்

தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள மோகன் ஜி அவ்வப்போது சமூகம் சார்ந்த பிரச்சனைக்கு குரல் கொடுத்து வருகிறார். சினிமா பிரபலங்களையும் தவறு என தனது மனதுக்கு தவறு என பட்டால் விமர்சிக்க தவறுவதில்லை இயக்குநர் மோகன் ஜி. அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி பசிக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்க வேண்டும் என சென்டிமென்ட்டாக டிவிட்டியிருந்தார்.

பசி எடுக்கலன்னா உலகம் எப்படி இயங்கும்?

பசி எடுக்கலன்னா உலகம் எப்படி இயங்கும்?

அதனை பார்த்த மோகன், பசி எடுக்கலன்னா உலகம் எப்படி இயங்கும் என கேட்டு பதிலடி கொடுத்தார். அதனை தொடர்ந்து மதுக்கடைகளை திறப்பதற்கு எதிராக டிவிட்டியிருந்தார். இந்நிலையில் மேடைக்கு கீழே ஒரு பேச்சு..மேடைக்கு மேலே ஒரு பேச்சு.. இதுவே தற்போது பல சினிமா பிரபலங்களின் உயிர் மூச்சு.. என சினிமா பிரபலங்களை சாடி டிவிட்டியிருந்தார்.

கார்த்திக் டயல் செய்த எண்

கார்த்திக் டயல் செய்த எண்

இதேபோல் கவுதம் மேனனின் கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம் கள்ளக்காதலை ஊக்குவிப்பதாக உள்ளது என விமர்சனம் எழுந்தது. இப்படத்தை பார்த்த இயக்குநர் மோகன் ஜி, இளைஞர்களின் மனதில் விஷத்தை விதைக்காதீர்கள் என கவுதம் மேனனுக்கு கோரிக்கை விடுத்தார்.

நல்ல படங்களுக்கு பாராட்டு

நல்ல படங்களுக்கு பாராட்டு

அதேநேரத்தில் நல்ல படங்களை பாராட்டியும் வருகிறார் இயக்குநர் மோகன் ஜி. அந்த வகையில் ஜோதிகாவின் பொன்மகள் வந்தால் படத்தை பாராட்டினார் மோகன் ஜி. இதேபோல் அண்மையில் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தையும் பாராட்டி டிவியிருந்தார் மோகன் ஜி.

மோகன் ஜி இயக்கத்தில் ருத்ர தாண்டவம்

மோகன் ஜி இயக்கத்தில் ருத்ர தாண்டவம்

இந்நிலையில் தனது ருத்ர தாண்டவம் படம் குறித்த அப்டேட்டை கொடுத்துள்ளார் மோகன் ஜி. அதாவது இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ருத்ர தாண்டவம். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

ருத்ர தாண்டவம் - சென்சார் தகவல்

ருத்ர தாண்டவம் - சென்சார் தகவல்

இந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்த நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் தகவல் குறித்த செய்தி வெளியாகியுள்ளது. ருத்ரதாண்டவம் திரைப் படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யுஏ' சான்றிதழ் அளித்துள்ளனர்.

U/A சான்றிதழ் - விரைவில் ஆட்டம் ஆரம்பம்

U/A சான்றிதழ் - விரைவில் ஆட்டம் ஆரம்பம்

இதுதொடர்பாக டிவிட்டியுள்ள படத்தின் இயக்குநர் மோகன் ஜி, ருத்ரதாண்டவம் திரைப்படம் தணிக்கை நிறைவாக முடிந்தது.. தணிக்கை குழு படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்... ஈசன் அருளால் அனைத்தும் இனிதாக முடிந்தது. விரைவில் ஆட்டம் ஆரம்பம் என பதிவிட்டுள்ளார்.

ரிச்சர்ட் ரிஷி - தர்ஷா குப்தா லீடிங்

ரிச்சர்ட் ரிஷி - தர்ஷா குப்தா லீடிங்

இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரௌபதி படத்தில் நடித்த நாயகன் ரிச்சர்ட் ரிஷி மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா ஆகியோர் இணைந்து நடித்த இந்த திரைப்படத்தில் கௌதம்மேனன் முக்கிய கேரக்டரில் நடித்து இருக்கிறார்.

பிரமாண்ட வெற்றி பெற வாழ்த்துகள்

பிரமாண்ட வெற்றி பெற வாழ்த்துகள்

இந்நிலையில் ருத்ர தாண்டவம் படம் தொடர்பான இயக்குநர் மோகன் ஜியின் இந்த அப்டேட்டை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திரௌபதி படத்திற்கு யூஏ சான்றிதழ் கிடைத்தது குறித்து டிவிட்டியுள்ள இந்த நெட்டிசன், மிக்க மகிழ்ச்சி. படம் பார்க்க ஆவலுடன் உள்ளேன். திரௌபதி படம் மிக அருமை. பிரமாண்ட வெற்றி பெற வாழ்த்துகள். என பதிவிட்டுள்ளார்.

வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்

வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்

மற்றொரு ரசிகரான இவர், ருத்ரதாண்டவம் படம் தங்களின் வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லாக மாற வாழ்த்த்துக்கள் என இயக்குநர் மோகன்ஜியின் பதிவுக்கு வாழ்த்து கூறி பதில் அளித்துள்ளார்.

வெள்ளித்திரையில் காண ஆவலாக உள்ளது

வெள்ளித்திரையில் காண ஆவலாக உள்ளது

மற்றொரு ரசிகரான இவர், வாழ்த்துக்கள் சகோ விரைவில் வெளியிடுங்கள் வெள்ளித்திரையில் காண ஆவலாக உள்ளது என ருத்ர தாண்டவம் படம் குறித்து தனது ஆர்வத்தை பதிவு செய்துள்ளார்.

வேற லெவல் பண்ணிரலாம்

வேற லெவல் பண்ணிரலாம்

மேலும் பல ரசிகர்கள் சிறப்பாக வெற்றி அடைய வாழ்த்துக்கள்.. மகிழ்ச்சி.. படம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வாழ்த்துக்கள்.. வேற லெவல் பண்ணிரலாம்... என தங்களின் ஸ்டைலில் ருத்ர தாண்டவம் படத்திற்காக இயக்குநர் மோகன் ஜிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X