“ருத்ர தாண்டவம்“ கர்ணன் படம் பெற்ற புகழைவிட இரு மடங்கு புகழை பெறும்… ராதா ரவி பேச்சு !

சென்னை : ருத்ர தாண்டவம் திரைப்படம் கர்ணன் படம் பெற்ற புகழை விட இரு மடங்கு புகழ் பெறும் என்று நடிகர் ராதா ரவி கூறியுள்ளார்.

Recommended Video

Director Mohan G க்கு என்மேல் கோபம் | Rudra Thandavam press meet | Filmibeat Tamil

ரிஷி ரிச்சர்டு நடித்த ருத்ர தாண்டவம் திரைப்படம் அக்டோபர் 1ந் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இப்படத்தில், இயக்குனர் கவுதம் மேனன், ராதாரவி, மாளவிகா அவினாஷ், தர்ஷா குப்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ருத்ர தாண்டவம்

ருத்ர தாண்டவம்

இயக்குனர் ஜி மோகன் இயக்கத்தில் ரிஷி ரிச்சர்டு நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ருத்ர தாண்டவம். இப்படத்தில் ரிஷி ரிச்சர்டுக்கு ஜோடியாக பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான தர்ஷா குப்தா நடித்துள்ளார். ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜீபின் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு யூ/ஏ தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துள்ளது.

ராதாரவி பேச்சு

ராதாரவி பேச்சு

இப்படம் உலகம் முழுவதும் அக்டோபர் 1ந் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் ராதா ரவி, இந்தப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தவுடன் முதலில் மறுப்பு தெரிவித்தேன். ஏனெனில் ருத்ரதாண்டவம் என்ற பெயரில் வி. கே. ராமசாமி, நாகேஷ் நடித்திருக்கும் படத்தில் நானும் நடித்திருக்கிறேன். நாங்கள் ருத்ரதாண்டவம் என்ற பெயரில் படத்தை எடுக்க திட்டமிட்டு விவாதித்தோம். பிறகு சில காரணங்களால் அதனைத் தொடர முடியவில்லை என்றார்.

இருமடங்கு புகழ் பெறும்

மேலும் பேசிய அவர், ருத்ரதாண்டவம் படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு அவரை அட்டாக் செய்வதுபோல இருக்கிறது, இவரை அட்டாக் செய்வதுபோல இருக்கிறது என்கிறார்கள். யாரையும் அட்டாக் செய்யவில்லை. ஒரு நியாயமான கோரிக்கையை அருமையாக இயக்குநர் சொல்லியிருக்கிறார். இந்தப் படத்தை பார்த்துவிட்டு மற்றவர்கள் திருந்தவேண்டும். இந்தப் படம் அனைவருக்குமான பொதுவான படம். அக்டோபர் 1ந் தேதி வெளியான பிறகு படம் பேசுபொருளாகும். கர்ணன் படம் பெற்ற புகழைவிட இரு மடங்கு புகழை இந்தப் படம் பெறும் என்று ராதா ரவி பேசினார்.

ஜி மோகன் பேச்சு

ஜி மோகன் பேச்சு

அதற்கு முன்பு பேசிய இயக்குனர், ஜி மோகன், இந்து மதத்தை அழிக்க நினைக்கும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிரான திரைப்படமாக ருத்ர தாண்டவம் இருக்கும் என்று பேசி இருந்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர், பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X