எனக்கும் பா.ரஞ்சித்திற்கும் இடையே ஆரோக்கியமான போட்டி… ருத்ர தாண்டவம் இயக்குனர் பேச்சு !
சென்னை : ரிஷி ரிச்சர்டு நடித்த ருத்ர தாண்டவம் திரைப்படம் அக்டோபர் 1ந் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இப்படத்தில், இயக்குனர் கவுதம் மேனன், ராதாரவி, மாளவிகா அவினாஷ், தர்ஷா குப்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில்நடித்துள்ளனர்.
இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இயக்குனர் ஜி மோகன், எனக்கும் பா ரஞ்சித்திற்கும் ஆரோக்கியமான போட்டி இருக்கிறது என்றார்.

திரௌபதி வெற்றி
ஜி.எம். ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் உருவான திரௌபதி திரைப்படம் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ், நிஷாந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர், ஒருதரப்பினர் மத்தியில் இப்படத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் நிலவிய போதிலும், வணிகரீதியாக இப்படம் கணிசமான வெற்றியைப் பெற்றது.

ருத்ர தாண்டவம்
திரௌபதி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இக்கூட்டணி ருத்ர தாண்டவம் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில் ரிஷி ரிச்சர்டு நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான தர்ஷா குப்தா நடித்துள்ளார். ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜீபின் இசையமைத்துள்ள இப்படத்திற்கு யூ/ஏ தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படம் அக்டோபர் 1ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்து மதத்தை அழிக்கும் வேலைகள்
இந்த நிலையில் இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இந்து மதத்தை அழிக்க நினைக்கும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிரான திரைப்படமாக ருத்ர தாண்டவம் இருக்கும் என்று இயக்குநர் மோகன் கூறினார். அது திமுக, பெரியார் என அது யாராக இருந்தாலும் சரி என சூளுரைத்துள்ளார் ருத்ர தாண்டவம் இயக்குநர். மேலும் பேசிய அவர், இந்து மதத்தை அழிக்கும் வேலைகள், நமக்கு தெரியாமலேயே நாசூக்காக நடைபெற்று வருகிறது வருத்தமளிப்பதாக கூறினார்.

ஆரோக்கியமான போட்டி
பா ரஞ்சித்துக்கும் உங்களுக்கும் போட்டியா என்ற கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு பதிலளித்த மோகன்ஜி எனக்கும் ரஞ்சித் அவர்களுக்கும் போட்டி உண்டு ஆனால் அது ஆரோக்கியமான போட்டி என்றும் அதே நேரத்தில் நான் அவர்களுக்கு எதிரானவர் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

பேசுபொருளானது.
இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆன அன்றே மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ருத்ர தாண்டவம் திரைப்படம் அக்டோபர் 1 ந் ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











