“ருத்ர தாண்டவம்“ ரிலீஸ் தேதி வெளியானது… எகிறும் எதிர்பார்ப்பு !

சென்னை : ரிஷி ரிச்சர்டு நடித்த ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதில், இயக்குனர் கவுதம் மேனன், ராதாரவி, மாளவிகா அவினாஷ்,தர்ஷா குப்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் டிரைலர் வெளியான போதே இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளப்பிய நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்திற்கு எதிர்ப்பு வலுக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

திரௌபதி வெற்றி

திரௌபதி வெற்றி

ஜி.எம். ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் உருவான திரௌபதி திரைப்படம் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ், நிஷாந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர், ஒருதரப்பினர் மத்தியில் இப்படத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் நிலவிய போதிலும், வணிகரீதியாக இப்படம் கணிசமான வெற்றியைப் பெற்றது.

ருத்ர தாண்டவம்

ருத்ர தாண்டவம்

திரௌபதி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இக்கூட்டணி ருத்ர தாண்டவம் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில் ரிஷி ரிச்சர்டு நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான தர்ஷா குப்தா நடித்துள்ளார். ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜீபின் இசையமைத்துள்ள இப்படத்திற்கு யூ/ஏ தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துள்ளது.மேலும், இப்படத்தின் தமிழக உரிமையை 7ஜி ஃபிலிம்ஸ் சிவா கைப்பற்றியுள்ளார்.

பேசுபொருளான டீசர்

பேசுபொருளான டீசர்

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த டிரைலரில், மதம் மாறிட்ட சாதியை பயன்படுத்தக் கூடாதுனு விழிப்புணர்வு வந்துட்டா, எவன் மாறுவான், இங்கே மதத்தைவிட சாதிக்குத்தான் வேரு, புதுசா எவனும் மாறவும் மாட்டான், மாறுனாலும் யோசிக்க ஆரம்பிச்சிடுவான் என்று சாடும் வசனமும், என் வேலைய மட்டும்தானடா நான் பாத்துக்கிட்டிருந்தேன்... என்னைய போய் சாதி வெறியன்னு ஊரெல்லாம் பேச வச்சு... எதுக்குடா இந்த கேவலமான அரசியல்...' ஆகிய வசனங்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகின.

ரிலீஸ் தேதி

ரிலீஸ் தேதி

இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆன அன்றே மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ருத்ர தாண்டவம் திரைப்படம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X