அனுஷ்காவின் ருத்ரமாதேவி ரசிகர்களைக் கவர்ந்ததா?

By Manjula

சென்னை: தமிழ் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ருத்ரமாதேவி திரைப்படம் இன்று தமிழ்நாடு முழுவதும் 2D மற்றும் 3D முறையில் வெளியாகியிருக்கிறது.

பாகுபலிக்குப் பின்னர் அனுஷ்கா ராணியாக நடித்து வெளிவந்திருக்கும் படம் ருத்ரமாதேவி. முன்னணி நடிகர்களுக்கு இணையாக இந்தப் படத்தில் ராணியாக நடிப்பில் அசரடித்திருக்கிறார் அனுஷ்கா.

தமிழில் சற்று தாமதமாக வெளியாகியிருக்கும் ருத்ரமாதேவி ரசிகர்களைக் கவர்ந்ததா என்று பார்க்கலாம்.

ருத்ரமாதேவி கதை

ருத்ரமாதேவி கதை

ககாதிய வம்சத்தில் ஆண் வாரிசுகள் இல்லாததால் அங்கு இளவரசியாகப் பிறக்கும் ருத்ரமாதேவியை (அனுஷ்கா) ருத்ரமாதேவுடு என்னும் இளவரசர் பிறந்திருப்பதாக அறிவித்து விடுகிறார் ராஜாவான ராஜ கணபதி தேவுடு. எதிரிகள் எல்லாப் பக்கமும் சூழ்ந்திருப்பதால் இளவரசர் பிறந்திருப்பதாக மக்களிடம் பொய் சொல்லி விடுகிறார். ருத்ரமாதேவி இளவரசனாக தனது தோற்றத்தை மாற்றிக் கொண்டு ராஜ்ஜியத்தை காப்பாற்றி வருகிறார். இந்த சூழ்நிலையில் எதிரி நாட்டினருக்கு ககாதிய வம்சத்தை ஆளுவது இளவரசன் அல்ல அழகான இளவரசிதான் என்னும் உண்மை தெரிய வருகிறது. இந்த சூழ்நிலையில் ருத்ரமாதேவி தனது தோற்றத்தை வெளிப்படுத்தினாரா இல்லை எதிரிகளுடன் போராடுகிறாரா? என்பதுதான் கிளைமாக்ஸ்.

தமிழ் மற்றும் தெலுங்கு நட்சத்திரங்கள்

தமிழ் மற்றும் தெலுங்கு நட்சத்திரங்கள்

அனுஷ்கா, அல்லு அர்ஜுன், ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், நித்யாமேனன், கேத்தரின் தெரசா ஆகியோரின் நடிப்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் ருத்ரமாதேவி திரைப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிட்டிருக்கிறது. 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தமிழ்நாடு முழுவதும் வெளியாகி இருக்கும் ருத்ரமாதேவியை 2D மற்றும் 3D முறையில் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

தமிழில்

தமிழில்

தமிழில் ஒரு வாரம் கழித்து இன்று ருத்ரமாதேவி வெளியாகி இருக்கிறது. படம் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். வேறு பெரிய படங்கள் எதுவும் இல்லாதது, சரித்திரப் படம் மற்றும் 3D முறை ஆகியவற்றால் நாளை மற்றும் அதற்கடுத்த நாளில் குடும்பத்துடன் ரசிகர்கள் வருவார்கள் என்று திரையரங்க உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

முதல் பாதி

ருத்ரமாதேவி முதல் பாதி முடிந்தது 2 வது பாதிக்காக காத்திருக்கிறேன் என்று விஜய் ரசிகன் தெரிவித்திருக்கிறார்.

ருத்ரமாதேவியை பார்க்கிறேன்

ருத்ரமாதேவி படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று திரையரங்கிலிருந்து புகைப்படம் எடுத்து பதிவிட்டிருக்கிறார் ஆர்யா விஜய்.

சமூக வலைதளங்களில் படத்தைப் பார்க்கலாம் என்று ரசிகர்கள் நேர்மறையான விமர்சனங்களை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X