twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ருத்ரமாதேவி எப்படி இருக்கு... பாத்தவங்க என்ன சொல்றாங்க?

    By Shankar
    |

    தென்னிந்திய சினிமாவில் நீண்ட நாட்களாக எதிர்ப்பார்க்கப்பட்ட இன்னொரு சரித்திரப் படம் ருத்ரமா தேவி.

    அனுஷ்கா, அல்லு அர்ஜுன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் இன்று தெலுங்கில் வெளியாகிவிட்டது. இதன் தமிழ்ப் பதிப்பு வரும் அக்டோபர் 16-ம் தேதி வெளியாகிறது.

    Rudramadevi: Viewers and critics reactions

    சரி, தெலுங்கில் இந்தப் படத்துக்கு என்ன மாதிரி வரவேற்பு கிடைத்திருக்கிறது? பாகுபலியை கொண்டாடிய தெலுங்கு மக்கள், தங்கள் வரலாற்று நாயகியான ருத்ரமாதேவியின் கதையை எப்படி வரவேற்கின்றனர்?

    இந்தப் படம் வெளியான 6 மணி நேரத்துக்குள் ரிசல்ட் தெரிந்துவிட்டது. அதாவது கலவையான விமர்சனம். சிலர் பெரிதாகப் பாராட்டியுள்ளனர். சிலர் கடுமையாக விமர்சித்துள்ளனர். சிலர் 5-க்கு 4 ஸ்டார்களையும், சிலர் கறாராக 1.5 நட்சத்திரமும் கொடுத்துள்ளனர்.

    முதலில் பாராட்டுக்களைப் பார்க்கலாம்...

    படம் பிரமாண்டமாகவும், கண்களுக்கு விருந்து படைக்கும் விதமாகவும் உருவாக்கப்பட்டுள்ளதாம். படத்தின் கதையமைப்பும், அனுஷ்கா, அல்லு அர்ஜூன், பிரகாஷ் ராஜ் நடிப்பு மிகச் சிறப்பாக அமைந்துள்ளதாம்.

    இந்தப் படத்தில் இளையராஜாவின் பின்னணி இசை பிரமாதமாக அமைந்துள்ளதாகப் பாராட்டியுள்ளனர். அதே நேரம் பாடல்கள் ஸ்பீட் பிரேக்கர்களாக நிற்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர் படம் பார்த்த பெரும்பாலானோர். காரணம் அவற்றைப் படமாக்கிய விதமும், கதையில் பொருத்திய சூழலும் சரியாக அமையவில்லையாம்.

    அஜயன் வின்சென்டின் ஒளிப்பதிவு மிகச் சிறப்பாக வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

    மொத்தத்தில் தெலுங்கு மக்களின் சரித்திரத்தின் ஒரு பகுதி என்பதால் இந்தப் படத்தைக் கொண்டாட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    படத்தின் பெரும் குறைகள்...

    நிஜ சரித்திரக் கதையை கையிலெடுத்த இயக்குநர் குணசேகர், அதை சுவாரஸ்யமான காட்சிகளாகக் காட்டுவதில் தோல்வியடைந்துவிட்டதாகவும், வசனங்கள் கூட ரொம்ப சாதாரணமாக அமைந்துவிட்டதாகவும் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    அதேபோல, ருத்ரமாதேவி பாத்திரத்தை சிறப்பிப்பதாகக் கூறி, தேவையற்ற காட்சிகளை வைத்து எரிச்சல்படுத்தியுள்ளாராம். அதேபோல தொழில்நுட்பத்தை சரியாகக் கையாள முடியாமல், பல 3 டி காட்சிகளில் கோட்டை விட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

    ருத்ரமாதேவி தன் மக்களால் ஏன் கொண்டாடப்பட்டார்? மக்களுக்கு அவர் என்ன நன்மை செய்தார் என்பதையெல்லாம் சொல்லாமல் விட்டதால், அந்தப் பாத்திரம் மனதில் ஒட்டவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

    இதெல்லாம் சரிதானா என்பதை படம் பார்த்த நீங்கள் உறுதிப்படுத்துங்கள். மற்றவற்றை அக்டோபர் 16-ம் தேதி நமது விமர்சனத்தில் விரிவாகப் பார்க்கலாம்!

    English summary
    Finally Anushka's mega movie Rudramadevi Telugu version has released Today. Here is the reactions of common viewers and critics after watched the movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X