சொல்ல சொல்ல கேட்கமாட்றாங்க.. ஒரு மாதிரியா இருக்கு.. மேடையில் கத்தி கூச்சலிட்ட நடிகை!

ஹைதராபாத்: சினிமா திரையுலகில் நடிகைகளுக்கு பிரபலங்களால் வரும் தொல்லகளை தாண்டி, கூட்டங்களில் அசவுகரித்தை ஏற்படுத்தும் வகையில் ரசிகர்களும் நடந்து கொள்வது போன்ற சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. சில சமயங்களில் ரசிகர்களின் தொல்லையால் நடிகைகள் செய்வது அறியாது திகைத்து நிற்பார்கள். இதனால், நடிகைகளுக்கு பின்னால் பல விசயங்கள் கிசுகிசுக்கப்படுகிறது. அதேபோன்று தெலுங்கு திரையுலகில் இளம் நடிகை ருக்சார் தில்லான் நேற்று நடந்த விழா மேடையிலேயே கடுமையாக கோபத்துடன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

லண்டன் பொண்ணு: லண்டனில் பிறந்து இந்தியாவில் வளர்ந்து வரும் நடிகை ருக்சார் தில்லான். இவர், இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். கிருஷ்ணார்ஜுன யுத்தம் படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்த இவர், ஏபிசிடி, அமெரிக்கன் பார்ன் கன்புஸ்டு டெசி ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். அதேபோன்று 2020ல் வெளியான டில் பங்க்ரா பா லே என்ற இந்தி படத்திலும் நடித்துள்ளார். நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து இவர், தற்போது தில்ருபா படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

rukshar dhillon angry rukshar dhillon dilruba

தில்ருபா: கிரண் அப்பாவரம் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படம் வரும் 14ஆம் தேதி வெளியாகியுள்ளது. இப்படத்தின் ட்ரெயல்ர் படத்தின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. தமிழ் சினிமாவில் மணிகண்டனை போன்று தெலுங்கு திரையுலகில் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ஹிட் ஹீரோ லிஸ்டில் இணைந்துள்ளார் அப்பாவரம். தில்ருபா திரைப்படம் காதல், காமெடி, சென்டிமென்ட் என இளைஞர்களுக்கு பிடித்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான Vinaro Bhagyamu Vishnu Katha திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியை எதிர்பார்த்து கிரண் அப்பாவரம் காத்திருக்கிறார்.

rukshar dhillon angry rukshar dhillon dilruba

சர்ச்சை: பொதுவாக நடிகைகள் கலந்துகொள்ளும் விழா அல்லது கடைகள் திறப்பு விழா என்றால் அந்த இடம் எப்போதும் களேபரமாகத்தான் இருக்கும். நடிகைகள் அணிந்து வரும் ஆடைகளும் சர்ச்சைக்குள்ளாவது உண்டு. நடிகைகள் சில நேரம் மேடையில் பேச தெரியாமல் உளறி மாட்டிக்கொள்வார்கள். இன்ஸ்டாகிராமில் பகிரும் வீடியோக்களும் சர்ச்சையை ஏற்படுத்தும். ஆனால், தில்ருபா படத்தின் நடிகை கோபமாக சில விசயங்களை பேசியதற்கு பல நடிகைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

rukshar dhillon angry rukshar dhillon dilruba

போட்டோ எடுக்காதீங்க: தில்ருபா படத்தின் ட்ரெயிலர் விழாவில் பங்கேற்ற நடிகை ருக்சார் தில்லான், கொஞ்சம் பொறுமை இழந்து கோபத்துடன் போட்டோகிராபர்களை பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில் நான் யார் பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால், சில புகைப்பட கலைஞர்கள் என் அனுமதி இல்லாமல் எடுக்க வேண்டாம் என்று கூறினாலும் புகைப்படம் எடுக்கிறார்கள். அது எனக்கு அசெளகரியமாக இருக்கிறது. சாரி எனக்கு இப்படி எடுப்பது பிடிக்கவில்லை, அதை தவறாக எடுத்துக்க வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோவுக்கு ஆதரவாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: actress trailer நடிகை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X