#AskPoonam: ரூலர் விஜய்.. கிங்மேக்கர் அஜித்.. மெர்சலான பதிலளித்த பிரபல நடிகை.. பாராட்டும் ரசிகர்கள்

சென்னை: மெர்சல் படத்தில் வெற்றிமாறன் விஜய் என்ட்ரி காட்சியை பற்றிய கேள்விக்கு நடிகை பூனம் பஜ்வா மெர்சலான பதில் அளித்துள்ளார். தல அஜித் குறித்த கேள்விக்கும் சிறப்பான பதில் கூறியுள்ளார்.

இயக்குநர் ஹரி இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியான சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பூனம் பஜ்வா.

தமிழ், மலையாள சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை இன்றளவும் பேணி காத்து வருகிறார்.

கேள்வி கேட்கலாம்

கேள்வி கேட்கலாம்

மீண்டும் #AskPoonam என்ற கேள்வி பதில் நிகழ்ச்சியை டிவிட்டரில் டிரெண்டாக்கி வருகிறார் நடிகை பூனம் பஜ்வா. பல பிரபல நடிகர்களின் ரசிகர்களும் அவர்களுக்கு பிடித்தமான நடிகர்கள் பற்றியும், பூனம் பஜ்வாவை பற்றியும் கேட்கும் கேள்விகளுக்கு செம ஸ்மார்ட்டாக பதில் அளித்து வருகிறார்.

ரூலர்ஸ்

ரூலர்ஸ்

தளபதி விஜய் ரசிகர் ஒருவர் நடிகை பூனம் பஜ்வாவிடம், இந்த புகைப்படத்தை பற்றி என்ன நினைக்கிறீங்க என மெர்சல் படத்தில் வெற்றிமாறன் என்ட்ரி காட்சியை பதிவிட்டு கேள்வி எழுப்பினார். அந்த புகைப்படத்தில் எம்.ஜி.ஆர் இருப்பதை பார்த்த பூனம், ரூலர்ஸ்.. அப்பவும் இப்பவும் என படு மெர்சலாக பதில் அளித்துள்ளார்.

க்யூட்டி 2.0

க்யூட்டி 2.0

விஜய் தேவரகொண்டாவின் கீத கோவிந்தம், மகேஷ் பாபுவின் சரிலேரு நீக்கெவ்வரு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா பற்றி அவரது ரசிகர்கள் கேள்வியை எழுப்ப, க்யூட்டி 2.0 என பூனம் பஜ்வா கொஞ்சமும் பொறாமை இல்லாமல் பதில் அளித்துள்ளார். ராஷ்மிகா கார்த்தியின் சுல்தான் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தல அஜித்

தல அஜித்

தல அஜித்தை பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்க பூனம் பஜ்வா என்ற கேள்விக்கு, ‘கிங் மேக்கர்' என செம சூப்பரான பதிலை அளித்துள்ளார். தல ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். மேலும், பவன் கல்யாண் பெஸ்ட்டா? அஜித் பெஸ்ட்டா என்ற கேள்விக்கு, இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் என ஸ்மார்ட்டான பதிலை கூறி தப்பித்துக் கொண்டார்.

ஸ்டைலிஷ் ஹீரோ

ஸ்டைலிஷ் ஹீரோ

கோலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி அதிகப்படியான டோலிவுட் ரசிகர்களையும் கவர்ந்து வைத்திருக்கிறார் நடிகை பூனம் பஜ்வா. பவன் கல்யாண் ரசிகர்கள், அல்லு அர்ஜுன் ரசிகர்கள் என பலரும் தங்கள் நடிகர்களை பற்றி கேள்வி எழுப்பி வருகின்றனர். மகேஷ் பாபு ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு ஸ்டைலிஷ் ஹீரோ என பதிலளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X