திரிஷாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா சிம்பு? வைரலாகும் தகவல்.. இது உண்மையா? வதந்தியா?
சென்னை: நடிகை திரிஷாவை சிம்பு திருமணம் செய்து கொள்ளப்போவதாக தீயாக ஒரு தகவல் பரவி வருகிறது.
அலை, விண்ணைத் தாண்டி வருவாயா என இரு படங்களில் இணைந்து நடித்துள்ள சிம்புவும் திரிஷாவும் நீண்ட நாட்களாக நண்பர்களாக பழகி வருகின்றனர்.
நயன்தாரா, ஹன்சிகாவை காதலித்து பிரேக்கப் செய்த நிலையில், தற்போது திரிஷா - சிம்பு குறித்து வெளியாகி இருக்கும் தகவல் உண்மையா? வதந்தியா? என்ற சந்தேகத்தையே கிளப்புகிறது.

பெண்களின் மன்மதன்
எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் சரி, நடிகையாக இருந்தாலும் சரி நடிகர் சிம்புவின் பேச்சில் எளிதில் மயங்கி விடுவார்கள், அந்த அளவுக்கு உண்மையாக பழகக் கூடியவர் நடிகர் சிம்பு. அந்த வசீகரத்தால் பல நடிகைகள் சிம்புவின் காதலிகளாக மாறினார்கள். ஆனால், காதல் சீக்கிரமாக பிரிவதற்கான காரணம் தான் தெரிவதில்லை.

நயன்தாராவுடன்
வல்லவன் படத்தின் போது நயன்தாராவுக்கும் சிம்புவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஆனால், அந்த காதல் வெகு சீக்கிரமாகவே சில பல காரணங்களால் பிரிந்தது. மீண்டும் இருவரும் இணையவே மாட்டார்கள் என எதிர்பார்த்த நிலையில், இருவரையும் இணைத்து வைத்து இயக்குநர் பாண்டிராஜ் "இது நம்ம ஆளு" படத்தையே இயக்கி இருந்தார்.

அடுத்த பிரேக்கப்
வாலு படத்தில் நடிகை ஹன்சிகாவுடன் ஜோடி போட்டு நடித்த சிம்பு, அவரை காதலிக்கவும் செய்தார். நயன்தாரா போனா என்ன ஹன்சிகா வந்துட்டாரே என சிம்பு ரசிகர்கள் சந்தோஷப்பட்ட நிலையில், சிம்புவை ஹன்சிகாவும் பிரேக்கப் செய்து விட்டு சென்று விட்டார். ஆனால், தற்போது ஹன்சிகாவின் மஹா படத்திற்காக அவருடன் மீண்டும் இணைந்து நடித்துள்ளார் சிம்பு.

இருவருக்கும் முன்னாடியே
நயன்தாரா, ஹன்சிகா எல்லாம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பாகவே சிம்புவுடன் ஜோடி போட்டு நடித்தவர் நடிகை திரிஷா. இயக்குநர் விக்ரம் குமார் இயக்கத்தில் 2003ம் ஆண்டு வெளியான அந்த படத்தில் நடித்ததன் பிறகு இருவரும் நெருங்கிய நண்பர்களாக இத்தனை ஆண்டுகள் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

சரியான பொருத்தம்
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை பார்த்து விட்டு, தமிழ் சினிமாவில் சரியான காதல் ஜோடி இவர்கள் தான் என பல ரசிகர்களும் பாராட்டினார்கள். இந்த லாக்டவுனிலும் மீண்டும் கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்தில், இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

திரிஷாவுக்கும் காதல் தோல்வி
பாகுபலி நடிகர் ராணா டகுபதியும் திரிஷாவும் காதலித்து வந்த நிலையில், இருவரும் பிரேக்கப் செய்து கொண்டனர். பின்னர், தொழிலதிபர் வருண் மணியன் உடன் நிச்சயதார்த்தம் வரை சென்ற திரிஷாவின் திருமண கனவு சில பல காரணங்களுக்காக பிரேக்கப் ஆனது. இப்படி பல முறை திரிஷாவுக்கும் திருமணம் கை கூடவே இல்லை.

சிம்புவுடன் திருமணமா?
இந்த லாக்டவுனில் சிம்புவுடன் இணைந்து கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்தில் நடித்திருந்தார் திரிஷா. இந்நிலையில், தற்போது இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், இருவரும் காதலித்து வருவதாகவும், இருவருக்கும் ரகசியமாக திருமணம் ஆகி விட்டது, விரைவில் அறிவிப்புகள் வெளியாகும் என பலவிதமான தகவல்கள் தீயாய் பரவி வருகின்றன.

வதந்தியா
சிம்பு என் நண்பர் அவரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என பல வருடங்களுக்கு முன்பு நடிகை திரிஷா ஒரு பேட்டியில் கூறியிருந்தார். சிம்புவின் பெற்றோர்களும், சிம்புவுக்கு பெண் பார்த்து வருகின்றனர். இந்நிலையில், சிம்பு திரிஷா திருமண செய்தி உண்மையா? அல்லது வதந்தியா என்பதை அவர்கள் தரப்பு விளக்கம் அளிக்கும் என்றும், இதுவும் ஒரு லாக்டவுன் போரிங் வதந்தி தான் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











