Vijay -Trisha: அட்லீ விசேஷத்தில் விஜய் உடன் த்ரிஷாவுமா? மும்பைக்கு போனது இதுக்குத்தானா? செம தெளிவுதான்
சென்னை: நடிகர் விஜய் - நடிகை த்ரிஷா குறித்த பேச்சுக்கள் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாகவே சினிமா துறையிலும் அரசியல் தளத்திலும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதுவும் நடிகர் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்றும் அதனால் தனக்கு விவாகரத்து வேண்டும் என்றும் விஜய்யின் மனைவி சங்கீதா நீதிமன்றத்தை நாடிய பின்னர், விஜய் த்ரிஷாவுடன் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றது பெரும் பேசு பொருளாக மாறியது.
இப்படி இருக்கையில், விஜய்யும் த்ரிஷாவும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று யாரோ ஒரு இணையதள வாசி போட்ட போஸ்டுக்கு த்ரிஷாவின் அம்மா லைக் போட்டதும் பெரும் பேசு பொருளாக மாறியது. விவாகரத்து விவகாரம் வெளியான போது கூட விஜய்க்கு ஆதரவாக பேசி வந்தவர்கள், நடிகர் விஜய் த்ரிஷாவுடன் இணைந்து, ஒரே மாதிரி மேட்சிங்காக ஆடைகள் அணிந்து சென்றது பெரும் பேசு பொருளாக மாறியது.

விஜய் - த்ரிஷா: விஜய் த்ரிஷாவுடன் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றது பெரும் பேசு பொருளாக மாற, அவருக்கு ஆதரவாக பேசி வந்த பலரும் விஜய்யின் இந்த செயலை கடுமையாக கண்டித்தனர். இப்படி இருக்கும் போது, மகளிர் தினக் கொண்டாட்டத்தில் தனது விவாகரத்து விவகாரம் குறித்து பேசுகையில் அதெல்லாம் அவ்வளவு வொர்த் இல்லை என்று பேசியது பெரும் சர்ச்சையாக மாறியது.
அட்லீ வீட்டு விசேஷம்: இப்படி இருக்கையில் தற்போது தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. கட்சிகள் தங்களது வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். இப்படி இருக்கும் போது நடிகர் விஜய் மும்பையில் இயக்குநர் அட்லீ - ப்ரியா அட்லீ தம்பதியரின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இணையதளவாசிகள்: இப்படி இருக்கையில் இணையவாசிகள் சிலர், கடந்த வாரத்தில் த்ரிஷா மும்பைக்குச் சென்றார். தற்போது நடிகர் விஜய் மும்பையில் அட்லீ வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டார். இதை மையமாக வைத்து, விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து இந்த விசேஷத்தில் கலந்து கொண்டிருக்கலாம் என்று பேச்சுக்கள் பரவலாக அடிபடுகிறது. இருவரும் இணைந்து சென்றால் அது மேலும் சர்ச்சையாக மாறும், தேர்தலில் அது எதிரொலிக்கும் என்பதால் த்ரிஷாவுடன் விஜய் இணைந்து செல்ல வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறார் என்றும் அரசியல் தளத்தில் பேச்சுக்கள் அடிபடுகிறது.


Click it and Unblock the Notifications











