தமிழ்த்தாய் வாழ்த்தின்போது விஜய் எழுந்து நிற்கவில்லையா?: தயாரிப்பாளர் விளக்கம்
Recommended Video

சென்னை: திரையுலகினரின் மவுன போராட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது விஜய் எழுந்து நிற்கவில்லை என்று கூறி ஒரு வீடியோ தீயாக பரவியது. இந்நிலையில் இது குறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் கோவிந்த் விளக்கம் அளித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் திரையுலகினர் நேற்று மவுன போராட்டம் நடத்தினர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முதல் ஆள்
மவுன போராட்டத்தில் முதல் ஆளாக கலந்து கொண்டார் விஜய். மேடையில் அமர்ந்திருந்த விஜய் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது எழுந்து நிற்கவில்லை என்று கூறி ஒரு வீடியோ தீயாக பரவியது.
விளக்கம்
நேற்று நாசர் சர் மற்றும் பிறர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது விஜய் அமர்ந்திருந்தது போன்று போலி வீடியோ பல குரூப்களில் போஸ்ட் செய்யப்பட்டுள்ளது. அவர் எங்களுடன் சேர்ந்து எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். அந்த வீடியோ முற்றிலும் போலியானது என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் கோவிந்த் ட்வீட்டியுள்ளார்.
வேண்டாம்
மேடையில் அமர்ந்திருந்த விஜய் பக்கம் ஃபேனை திருப்பி வைக்க அவரோ அது எல்லாம் வேண்டாம் என்று கூறிவிட்டார். இதை பார்த்த விஜய் ரசிகர்கள் பெருமை அடைந்துள்ளனர்.
சமூக வலைதளம்
போராட்டம் நடந்த இடத்திற்கு விஜய் முதல் ஆளாக வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











