நடிகர் எம்.எஸ். பாஸ்கர் குறித்து காட்டுத் தீயாக பரவிய வதந்தி.. திரையுலகினரே பரப்பியதாக பரபரப்பு!
சென்னை: நகைச்சுவை நடிகர் எம்.எஸ். பாஸ்கர் குறித்து நேற்று இரவு பரபரப்பான செய்தி பரவியதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த பரபரப்புச் செய்தியை திரையுலகைச் சேர்ந்த சிலரே பரப்பியதால் பரபரப்பும் கூடியது. ஆனால் இது வதந்தி. இதை யாரும் நம்ப வேண்டாம் என்று இயக்குநரும், சக நகைச்சுவை நடிகருமான மனோ பாலா கூறியுள்ளார்.
பாஸ்கர் குறித்து ஏன் இப்படி வதந்தி பரவியது என்று தெரியவில்லை.

டப்பிங் முதல் நடிப்பு வரை
சகலகலா வல்லவன் என்று கூறும் அளவுக்கு பல்துறை திறமையாளர் எம்.எஸ்.பாஸ்கர். ஆரம்பத்தில் இவர் டப்பிங் கலைஞராக வலம் வந்தார்.

டிவியில் அசத்தல்
பின்னர் டிவியில் நடிகராக அறிமுகமானார். பல பிரபலமான சீரியல்களில் நடித்துள்ளார். குணச்சித்திரம் முதல் வில்லன் வரை டிவியில் கலக்கியுள்ளார்.

காமெடியில் சினிமா
ஆனால் சினிமாவில் புகுந்தபோது காமெடி வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். குறிப்பாக எங்கள் அண்ணா படத்தில் வடிவேலு, பாண்டியராஜன், பிரபுதேவா ஆகியோருக்கு இணையாக இவர் உள்ளே புகுந்து காமெடியில் கலக்கியது அனைவரையும் கவர்ந்தது.

விதம் விதமான ரோல்களில்
பிரகாஷ் ராஜ் படங்களி்ல இவருக்கு வித்தியாசமான ரோல்களைக் கொடுத்து நடிப்புத் திறமைக்கு நல்ல வேலை கொடுப்பார். அதேபோல பல படங்களில் இவரது நடிப்பு ஏ கிளாஸ் ஆக இருக்கும்.

திடீர் வதந்தி
இந்த நிலையில் நேற்று இரவு எம்.எஸ். பாஸ்கர் குறித்து பரபரப்பான தகவல் பரவியது. திரையுலகைச் சேர்ந்த சிலரே இதை வெளியிட்டதால் பரபரப்பு கூடியது.

வெறும் வதந்தி
ஆனால் விசாரித்துப் பார்த்தபோது அதில் உண்மை இல்லை என்று தெரிய வந்தது.

மனோபாலா கண்டனம்
இந்த வதந்திக்கு நடிகரும், இயக்குநருமான மனோபாலா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், எம்.எஸ். பாஸ்கர் உயிரோடுதான் இருக்கார். தயவு செய்து தவறான தகவலைப் பரப்பாதீர். அவருக்குக் குடும்பம் இருக்கிறது என்று கூறியுள்ளார் மனோபாலா.


Click it and Unblock the Notifications











