இந்த படத்தையாவது ரீமேக் செய்வாரா.. ஷாரூக்கானை சுற்றும் ரீமேக் வதந்திகள்!

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அசுரன் திரைப்படத்தை பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன.

மும்பை: கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர், பசுபதி, பிரகாஷ் ராஜ், டீஜே, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் அசுரன் படம் வெளியானது.

வெக்கை நாவலை மையமாக வைத்து சமூக பிரச்சனைகளை வெற்றிமாறன் கையாண்ட விதம் அசுரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு துணையாக நின்றது.

இந்நிலையில், இந்த படத்தை சமீபத்தில் ஷாரூக்கான் பார்த்து வியந்ததாகவும், விரைவில் அசுரன் படத்தை ரீமேக் செய்து நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அசுர வெற்றி

அசுர வெற்றி

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை படங்களை தொடர்ந்து மீண்டும் இணைந்த தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவான அசுரன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியான படங்களுடனும் போட்டி போட்டு ஓடி வருகிறது. 25 நாட்களை கடந்து அசுர வெற்றியை அசுரன் திரைப்படம் பதிவு செய்துள்ளது. மலையாள லேடி சூப்பர்ஸ்டாரான மஞ்சுவாரியர், அசுரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார்.

தெலுங்கில்

தெலுங்கில்

அசுரன் படத்தின் மாபெரும் வெற்றி தமிழ் சினிமாவை தாண்டி இந்தியளவில் பாராட்டுக்களை பெற்று வருகிறது. அசுரன் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது என்ற அதிகாரப்பூர்வ தகவலை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டார். டோலிவுட் ஸ்டார் வெங்கடேஷ் இந்த படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார்.

பாலிவுட் பாராட்டு

பாலிவுட் பாராட்டு

டோலிவுட்டில் அசுரன் படம் ரீமேக் ஆகவுள்ள நிலையில், அசுரன் படத்தை பார்த்த பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹர், அசுரன் இந்திய சினிமாவின் வெற்றி என தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டினார். மேலும், தனுஷின் நடிப்பு மற்றும் வெற்றிமாறனின் கதை சொல்லும் விதம் தன்னை வெகுவாக கவர்ந்தது என பாராட்டினார்.

எத்தனை ரீமேக்

எத்தனை ரீமேக்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படத்தை பார்த்து நடிகர் ஷாருக்கான், மெர்சல் படத்தை ரீமேக் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகின. அதன் பிறகு, புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில், மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த விக்ரம் வேதா படத்தை ஷாருக்கான் பார்த்து வியந்தார். அந்த படத்தை ரீமேக் செய்து நடிக்கப் போகிறார் என்ற செய்தியும் பரவியது.

ஆனால், இதுவரை ஷாருக்கான் தரப்பில் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாதது தான் இதில் வேடிக்கையான விஷயம்.

இதுவும் வதந்தியா?

இதுவும் வதந்தியா?

மெர்சல், விக்ரம் வேதா என பிரபல கோலிவுட் படங்கள் ஷாரூக்கானின் ரீமேக் லிஸ்டில் ஏற்கனவே இருக்கிறது. இந்நிலையில், தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தை ஷாரூக்கான் பார்த்து, வியந்துள்ளார் என்றும், விரைவில் அந்த படத்தை ரீமேக் செய்து நடிக்கவுள்ளார் என்ற தகவலும் பரவி வருகிறது. ஆனால், இதுவரை அசுரன் குறித்து நடிகர் ஷாரூக்கான் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X