ரெடி ஜூட்... நாளை வெள்ளிக்கிழமை... தியேட்டரில் 7 படங்கள் ரிலீஸ்!

சென்னை : வெள்ளிக்கிழமை வந்தாலே சினிமா பிரியர்களுக்கு குஷிதான். தியேட்டரில் ஏதாவது ஒரு படம் வெளியாகும். ஆனால், நாளைக்கு ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல 7 படங்கள் வெளியாக உள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானதால், அமைதியாக இருந்த சிறு பட்ஜெட் படங்கள் வரிசையாக போட்டிப்போட்டுக்கொண்டு நாளை வெளியாக உள்ளது.

இதில் எந்த படத்திற்கு நன்றாக கல்லாக்கட்டும் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

தி கிரேட் இந்தியன் கிச்சன்

தி கிரேட் இந்தியன் கிச்சன்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின் ரீமேக்கில் நடித்துள்ளார். பெண்களுக்கு சமையல் அறை மட்டும் உலகம் அல்ல என்பதை உணர்ந்தும் ஒரு பாடமாக இப்படம் உள்ளது. ஆர்.கண்ணன் இயக்கி உள்ள இப்படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

மைக்கேல்

மைக்கேல்

சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி நடித்திருக்கும் படம் மைக்கேல். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில், திவ்யான்ஷா கௌஷிக், கௌதம் வாசுதேவ் மேனன், வருண் சந்தோஷ், ஐயப்ப சர்மா, அனுசுயா பரத்வாஜ், வரலட்சுமி சரத்குமார் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தியில் பான் இந்தியப்படமாக வெளியாகிறது.

ரன் பேபி ரன்

ரன் பேபி ரன்

வீட்ல விஷேசம் படத்தை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி நடித்து வெளியாக இருக்கும் படம் 'ரன் பேபி ரன்'. பிரபல மலையாள இயக்குனர் ஜெயன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் ஆர்ஜே பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ், விவேக் பிரசன்னா, ஜோ மல்லூரி ஆகியோர் நடித்துள்ளனர். ஒரு சராசரி மனிதன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தை த்ரில்லிங்காக இப்படத்தில் காட்டப்பட்டுள்ளது.

பொம்மை நாயகி

பொம்மை நாயகி

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள படம் பொம்மை நாயகி. அப்பா, மகளின் பாசத்தை அழகான உணர்வுபூர்வமான படமாக உருவாகி உள்ளது. இதில், யோகி பாபு, ஸ்ரீமதி, சுபத்ரா,புகழ் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தலைக்கூத்தல்

தலைக்கூத்தல்

படுத்தப்படுக்கையாக இருக்கும் முதியவர்களின் தலையில் விளக்கெண்ணெய் தடவி இளநீர் குடிக்க வைத்து கருணை கொலை செய்யும் முறையை தலைக்கூத்தல் திரைப்படத்தின் மையக்கரு. இப்படத்தில் சமுத்திரக்கனி, வசுந்தரா, கதிர், கலைச்செல்வன், ஆடுகளம் முருகதாஸ், வையாபுரி, ஆகியோர் நடித்துள்ளனர்.

நான் கடவுள் இல்லை

நான் கடவுள் இல்லை

எஸ்ஏ சந்திரசேகர் இயக்கி உள்ள நான் கடவுள் இல்லை படத்தில், சமுத்திரகனி, இனியா, சாக்ஷி அகர்வால், இமான் அண்ணாச்சி ஆகியோர் நடித்துள்ளனர். இதில்,சமுத்திரக்கனி அதிரடியாக சிபிஜ அதிகாரியாக நடித்துள்ளார். பருத்திவீரன் பட நடிகர் சரவணன் படுமோசமான வில்லனாக நடித்துள்ளார். இருவருக்கும் நடக்கும் சண்டை தான் நான் கடவுள் இல்லை படத்தின் கதை. இப்படம் நாளை தியேட்டரில் வெளியாக உள்ளது.

குற்றப் பின்னணி

குற்றப் பின்னணி

ராட்சசன் படத்தில் கிறிஸ்டோபராக நடித்த சரவணன் குற்றப் பின்னணி படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். பெண்களின் தவறான நடவடிக்கையால் குடும்பம் மற்றும் தனி மனிதன் எவ்வாறு பாதிக்கப்படுகிறான் என்பதை சஸ்பென்ஸ் திரில்லராக உருவான படம் தான் குற்றப் பின்னணி.இப்படத்தில், தீபாளி, தாட்சாயிணி. சிவா, ஹனிபா, பாபு,நேரு, லால் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X