twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பைனான்சியர் அன்புச்செழியன், ஏஜிஎஸ் குழுமத்தில் ஐடி ரெய்டு: ரூ.24 கோடி பணம்.. தங்க நகைகள் பறிமுதல்!

    |

    Recommended Video

    Thalapathy Vijay in Tragedy | Master Shooting Spot | Vijay Sethupathi

    சென்னை: பைனான்சியர் அன்புச்செழியன், ஏஜிஎஸ் நிறுவன அலுவலகங்களில் நடத்தப்பட்ட ரெய்டில் கணக்கில் வராத 24 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழ் சினிமாவில் எங்கேயும் காதல், தனி ஒருவன், அனேகன் உள்ளிட்ட ஏராளமான படங்களை கொடுத்த புரடெக்ஷன் நிறுவனம் ஏஜிஎஸ். இந்த நிறுவனம் கடைசியாக நடிகர் விஜயை வைத்து பிகில் படத்தை தயாரித்தது.

    Rupees 24 crore money and jewels and important documents seized in IT raid

    இந்தப் படத்தால் மிகப்பெரிய லாபம் பெற்றதாகவும் பிகில் படம், 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது. அதே நேரத்தில் பிகில் திரைப்படம் நஷ்டம் என்றும் கூறப்பட்டது.

    இந்நிலையில் வரி ஏய்ப்பு புகாரில் சென்னை தியாகராய நகரில் உள்ள வீடு மற்றும் தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகம் உட்பட ஏஜிஎஸ். நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல், கோபுரம் ஃபிலிம்ஸ் அன்புச்செழியன் வீடு, அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் நடிகர் விஜயின் வீடுகளிலும் ரெய்டு நடைபெற்று வருகிறது.
    இந்நிலையில் பைனான்சியர் அன்புச்செழியன், ஏஜிஎஸ் நிறுவன அலுவலகங்களில் நடத்தப்பட்ட ரெய்டில் கணக்கில் வராத 24 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் கணக்கில் வராத தங்க நகைகளும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Rupees 24 crore money and jewels and important documents has been seized in IT raid from AGS and Financier Anbuchezhiyan office.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X