வெயில் தாங்க முடியாமல் நயன்தாரா பட நடிகர் மயங்கி விழுந்து மரணம்
ஹைதராபாத்: சிரஞ்சீவியின் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்து வந்த ரஷ்யாவை சேர்ந்த நடிகர் வெயில் தாங்க முடியாமல் உயிர் இழந்துள்ளார்.
ராம் சரண் தேஜா தயாரிப்பில் சிரஞ்சீவி நடித்து வரும் படம் சயீரா நரசிம்ம ரெட்டி. நயன்தாரா, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, தமன்னா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மதியம் ஹைதராபாத்தில் உள்ள டிஎல்எஃப் கட்டிடம் அருகே ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டுபிடித்து மருத்துவமனையில் அனுமதித்தனர்.

நடிகர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதையடுத்து போலீசார் அந்த நபரின் செல்போனை பரிசோதனை செய்தபோது சயீர நரசிம்ம ரெட்டி செட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களாக இருந்தது.

போலீஸ்
போலீசார் சயீரா நரசிம்ம ரெட்டி செட்டிற்கு சென்று விசாரித்தபோது இறந்தவர் அந்த படத்தில் எக்ஸ்ட்ராவாக நடித்த ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர்(38) என்பது தெரிய வந்தது. அலெக்சாண்டர் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் இறந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அடையாளம்
இறந்தவர் அலெக்சாண்டர் தான் என்பதை கோவாவில் உள்ள அவரின் நண்பரும் உறுதி செய்துள்ளார். அலெக்சாண்டர் சுற்றுலா விசாவில் ஏப்ரல் மாதம் இந்தியா வந்துள்ளார். கோவாவில் நண்பர்களுடன் இருந்த அவர் மும்பை சென்ற இடத்தில் சினிமா ஏஜெண்டுகள் சிலர் அவரை படங்களுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

படப்பிடிப்பு
மும்பை ஏஜெண்டுகளின் பரிந்துரையால் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே அலெக்சாண்டர் ஹைதராபாத் வந்துள்ளார். படத்தில் அவர் ஆங்கிலேயராக நடித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











