விஜய்யை இழிவா எப்படி பேசலாம்.. ஆரம்பிக்கும் போதே அழிக்கப் பார்க்காதீங்க.. கொந்தளித்த இயக்குநர்கள்!

சென்னை: நடிகர் விஜய்யை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஆளூர் ஷா நவாஸ் கூத்தாடி எல்லாம் அரசியலுக்கு வரலாமா என இழிவாக பேசியதை சினிமா நடிகர்கள் ஒருத்தரும் கண்டிக்க திராணியில்லை என ப்ளூ சட்டை மாறன் விளாசியிருந்தார். இந்நிலையில், சினிமா இயக்குநர்களான ஆர்.வி. உதயகுமார் மற்றும் பேரரசு உள்ளிட்டோர் நேற்று நடைபெற்ற திரைப்பட விழாவில் விஜய்க்கு ஆதரவாகவும் விஜய்யை கூத்தாடி என இழிவாக பேசிய நபர்களை கண்டித்தும் பேசியிருந்தனர்.

நடிகராக சினிமாவில் உச்சம் தொட்ட விஜய் அடுத்ததாக அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள விஜய் தனது முதல் மாநாட்டிலேயே 8 லட்சத்துக்கும் அதிகமான மக்களை திரட்டியிருந்தது பல அரசியல் கட்சியினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

vijay rv udhayakumar perarasu


சமீபத்தில் நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதும் காட்டுத் தீ போல பற்றிக் கொண்டு எரிய விடுதலை சிறுத்தைகள் கட்சியில் பெரிய பூகம்பமே வெடித்து ஆதவ் அர்ஜுனா தற்காலிகமாக இடை நீக்கம் செய்யும் அளவுக்கு சர்ச்சைகள் வெடித்தது.

கூத்தாடி அரசியலுக்கு வரலாமா?: நடிகர் விஜய் சினிமாவுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளார். வரும் 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர் ஆகப்போகிறேன் என்பதை உறுதியாக நம்பி களத்தில் இறங்க உள்ளார். தளபதி 69 படத்துக்குப் பிறகு சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்றும் முழு நேரம் மக்களுக்காக சேவை செய்யப் போவதாக அறிவித்துள்ளார். ஆனால், அரசியலில் அவர் அடியெடுத்து வைத்தவுடனே அவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஆளூர் ஷா நவாஸ் கூத்தாடி எல்லாம் அரசியலுக்கு வரலாமா? என கேள்வி எழுப்பியது ரசிகர்களையும் தவெக தொண்டர்களையும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஆர்.வி. உதயகுமார் கண்டனம்: பேரரிஞர் அண்ணா சினிமாவுக்கு வசனம் எழுதியுள்ளார். கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதி படங்களை தயாரித்துள்ளார். மு.க. ஸ்டாலின் நடித்துள்ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் சினிமா நடிகர் தான். விஜய்யை கூத்தாடின்னு சொன்னா இவங்க எல்லாருமே கூத்தாடிகள் தான். ஆனால், அதை இழிவாக எப்போதுமே யாருமே பேசக் கூடாது. அவர் இப்போதான் அரசியலில் அடியெடுத்து வைக்க உள்ளார். அதற்குள் அவரை அழித்து விட வேண்டும் என்றும் சினிமாக்காரர்களை அசிங்கப்படுத்தும் விதமாக பேசுவதை எல்லாம் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளவே முடியாது என கண்டனத்தை பதிவு செய்தார்.

பேரரசு பொளேர்: நடிகர் விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி என 2 மிகப்பெரிய வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் பேரரசு நேற்று நடைபெற்ற ரச்சிதா மகாலட்சுமியின் எக்ஸ்ட்ரீம் படத்தின் விழாவில் கலந்துக் கொண்டு பேசும் போது, சினிமாவில் தான் பல நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுக்கிறோம். அவன் எவ்வளவு ஊழல் பண்ணான், இவன் எவ்வளவு மோசடி பண்ணான்னு தான் அரசியல்வாதிகள் பேசுவாங்க. உங்களைவிட நாங்க ஒன்றும் கேவலமானவர்கள் இல்லை. ஒரு சாதியை வைத்து தப்பா பேசக் கூடாதுன்னு சொல்றாங்க.. சினிமா நடிகர்களை கூத்தாடின்னு சொல்லி கேவலப்படுத்தலாமா? என பேரரசு கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர் விஜய்க்கு மட்டுமில்லை சினிமா பிரபலங்கள் யாராக இருந்தாலும் அவர்களை அரசியல்வாதிகள் மட்டுமில்லை யார் அசிங்கப்படுத்தினாலும் பொறுத்திருக்கமாட்டோம் என எச்சரித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X