'ஓவரா ஆட்டம் போட்ட.. மவனே காணாம போயிருவ!' - விஜய்சேதுபதிக்கு ஆளும்கட்சி இயக்குநர் எச்சரிக்கை

By Shankar

சென்னை: விஜய் சேதுபதி இப்போது போலவே எளிமையாக இருந்தால்தான் நல்லது. மவனே மீறி ஓவரா ஆட்டம் போட்ட, காணாம போயிருவ, என்று எச்சரித்தார் அதிமுக இயக்குநர் என்று அழைக்கப்படும் ஆர் வி உதயகுமார்.

விஜய் சேதுபதி - ஐஸ்வர்யா, நீலிமா, ஜெயப்பிரகாஷ் நடித்துள்ள படம் பண்ணையாரும் பத்மினியும். சிநேகா கவுரவத் தோற்றத்தில் வருகிறார். அருண்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

RV Udhayakumar's warning to Vijay Sethupathy

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது.

விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார், இயக்குநர்கள் கரு பழனியப்பன், சீனு ராமசாமி உள்பட பலரும் பங்கேற்றனர்.

இயக்குநர் ஆர்வி உதயகுமார் பேசுகையில், "இன்றைக்கு தினத்தந்தி பேப்பரைத் திறந்தால் நான்கு பக்கங்களுக்கு சினிமா விளம்பரங்கள். சந்தோஷமாக இருந்தது. அந்த அளவுக்கு சினிமாவை சுதந்திரமாக இயங்க அனுமதித்திருக்கிறது இந்த அரசு.

ஒரு ஹீரோவுக்கான இலக்கணத்தை உடைத்திருக்கிறார் விஜய் சேதுபதி. ஒரு ஹீரோ இப்படித்தான் நடக்கணும், இருக்கணும் என்பதையெல்லாம் மாற்றியிருக்கிறார். அவரது எளிமை எனக்கு ரொம்பப் பிடிக்கும். இதை அவர் தொடரவேண்டும். மீறி ஆட்டம் போட்டா.. மவனே காணாம போயிருவ...

இன்றைக்கு உள்ள ஹீரோக்கள், இயக்குநர்கள், ரெண்டு படம் ஓடினதுமே ஏதோ இவர்கள்தான் சினிமாவையே கண்டுபிடித்தவர்கள் மாதிரி பேசுவதைப் பார்க்கிறேன். ஆனால் இந்தப் படத்தின் இயக்குநர் அப்படி இல்லை. நிச்சயம் பெரிய ஆளா வருவார்.

படத்தின் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் காத்தடித்தால் பறந்துவிடுவது மாதிரிதான் இருக்கிறார். ஆனால் திறமைக்காரர். இசைஞானி இளையராஜாவுக்கப்புறம் முதல்முறை கேட்கும்போதே பிடிக்கிற மாதிரி பாடல்களைப் போட்டிருக்கிறார்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X