Deadpool 3: அப்படிபோடு.. டெட்பூல் படத்தில் வால்வரினா? ஹக் ஜேக்மேனை இப்படி பார்த்து எவ்ளோ நாளாச்சு!
லாஸ் ஏஞ்சல்ஸ்: ரியான் ரெனால்ட்ஸ் நடிப்பில் வெளியான டெட்பூல் முதல் மற்றும் இரண்டாம் பாகம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், அதன் 3ம் பாகம் அதிரடியாக ஹாலிவுட்டில் உருவாகி வருகிறது.
பிரபல நடிகர்களை கேமியோ ரோலில் கொண்டு வருவதும் மல்டிவெர்ஸ் கதைகளை உருவாக்கி பல சூப்பர் ஹீரோக்களை ஒன்றிணைத்து ரசிகர்களுக்கு தியேட்டரில் விருந்து வைப்பதும் சமீப காலமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், எக்ஸ்மென் படங்களில் வால்வரின் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டிய ஹக் ஜேக்மேன் டெட்பூல் 3 படத்தில் ரியான் கோஸ்லிங் உடன் சண்டை போடுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் மேக்கிங் ஸ்டில்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி உலகளவில் டிரெண்டாகி வருகின்றன.
டிரெண்டிங்கில் டெட்பூல் 3: ஹாலிவுட் இயக்குநர் ஷான் லெவி இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் டெட்பூல் 3ம் பாகம் வரும் 2024 மே 3ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த படத்தின் விறுவிறுப்பான ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், அதிகாரப்பூர்வமாக படக்குழு ப்ரமோஷனுக்காக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சர்வதேச அளவில் டிரெண்டாகி வருகிறது.

குறிப்பாக இப்படியொரு கேமியோ படத்தில் வருவது என்றால் படு ரகசியமாக ஈஸ்டர் எக் ஆக வைத்திருப்பார்கள். ஆனால், அதையே ப்ரமோஷனுக்காக டெட்பூல் 3 டீம் பயன்படுத்தி உள்ளது என கமெண்ட்டுகள் குவிகின்றன.
டெட்பூலுடன் மோதும் வால்வரின்: சூப்பர் ஹீரோக்களிலேயே அதிக கிறுக்குத்தனமாக செயல்களை செய்தும் பேசியும் ரசிகர்களை என்டர்டெயின் செய்து வருவது ரியான் ரெனால்ட்ஸ் நடித்து வரும் டெட்பூல் கதாபாத்திரம் தான்.

இந்நிலையில், டெட்பூலுடன் எக்ஸ்மென் வால்வரின் சண்டை போடுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், மேக்கிங் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி சர்வதேச அளவில் டிரெண்டாகி வருகின்றன.
ஹக் ஜேக்மேனை இப்படி பார்த்து: எக்ஸ்மென் மற்றும் வால்வரின் தனி சீரிஸ் படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி வந்த ஹக் ஜேக்மேன் நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் செம ஸ்மார்ட்டாகவும் யங் வால்வரினாகவும் காட்சியளித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

எவ்ளோ நாள் ஆச்சு தலைவா உங்களை இப்படி பார்த்து என ரசிகர்கள் அந்த போட்டோக்களை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











