மார்வெல் ரசிகர்களுக்கு ஒரு மாஸ் அப்டேட்.. ரியான் ரெனால்ட்ஸ் நடிப்பில் டெட்பூல் 3 ரெடியாகுது!
லாஸ் ஏஞ்சல்ஸ்: ரியான் ரெனால்ட்ஸ் நடிப்பில் எக்ஸ் மென் பட வரிசையில் மார்வெல் தயாரிப்பில் உருவாகி வருகிறது டெட்பூல் 3.
மார்வெல் ஸ்டூடியோவில் டெட்பூல் 3 படம் உருவாகி வரும் அறிவிப்பை ஹிரிஓ ரியான் ரெனால்ட்ஸ் கிறிஸ்துமஸ் தின சிறப்பு பேட்டியில் அறிவித்துள்ளார்.
டெட்பூல் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகம் உலகளவில் மிகப்பெரிய வசூல் வேட்டையும், ரியான் ரெனால்ட்ஸுக்கு எக்கச்சக்க ரசிகர்களையும் உருவாக்கியுள்ள நிலையில், இந்த அறிவிப்பு ரியான் ரெனால்ட்ஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

எக்ஸ்மென் சம்மந்தம்
டெட்பூல் படத்திற்குக் எக்ஸ்மென் படத்திற்கும் மிகப்பெரிய சம்மந்தம் இருக்கிறது. எக்ஸ்மேன் பட வரிசையில் உருவான படம் தான் டெட்பூல் என்பது ஆச்சர்யம் ஆனால் உண்மையான விஷயம். டெட்பூல் கதாபாத்திரம் மற்றும் டெட்பூல் கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் மியூட்டன்ட்கள் தான்.

காமெடி சூப்பர் ஹீரோ
மார்வெல் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஆரம்பத்தில் கைக்கொடுத்தது எக்ஸ்மென் படங்கள் தான். அதன் பிறகு தான் அவெஞ்சர்ஸ் உலகத்தை மார்வெல் உருவாக்கியது. ஆனால், எக்ஸ்மென் படங்களில் காமெடி அதிகளவில் இருக்காது. அதனை போக்க உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் தான் இந்த டெட்பூல்.

டெட்பூல் 3
மார்வெல் தயாரிப்பில் டெட்பூல் 3 படமும் உருவாகி வருவதாக நடிகர் ரியான் ரெனால்ட்ஸ் சமீபத்திய கிறிஸ்துமஸ் பேட்டியில் தனது ரசிகர்களுக்கு மாஸ் அப்டேட்டை கொடுத்துள்ளார்.

எப்போ ரிலீஸ்
டெட்பூல் 3 படத்திற்கு உலகளவில் ரசிகர்கள் அதிகம். டெட்பூல் கதாபாத்திரத்தில் நடிக்கும் ரியான் ரெனால்ட்ஸ் சினிமாவின் நான்காம் சுவர் என்று அழைக்கப்படும் விதியையும் பிரேக் செய்து அந்த படத்தையே அந்த படத்தில் கலாய்ப்பார். இதனால், டெட்பூல் 3 படம் எப்போ வரும் என அதன் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். வரும் 2021ம் ஆண்டு டெட்பூல் 3 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











