ரியோ ராஜ் 2.0 வெர்ஷன்...ஹீரோ மேட்டர் இல்லங்க மேட்டர் தான் படமே... ஸ்வீட் ஹா்ட் பட டிரைலர்!

சென்னை: ஜோ படத்திறக்கு ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்வீட்ஹார்ட் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இப்படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்து இசையமைத்துள்ளார். அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ்.சுகுமார் இயக்கியுள்ள இப்படம் பிரேக் காதல், ரொமான்ஸ் என கலகலப்பான காமெடியாக வெளிவந்துள்ளது. இன்றைய இளைஞர்களுக்கு பிடித்த காதல் கதையாக இருக்கும் என டிரைலரை பார்க்கும் போதே தெரிகிறது.

ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் "ஸ்வீட் ஹார்ட்". அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ்.சுகுமார் இயக்கியுள்ளார். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஸ்வீட்ஹார்ட் படத்தின் டிரைலரில் படம் முழுக்க காமெடியும் காதலும் சஸ்பென்ஸ் என கலகலப்பாக நகர்கிறது.

Sweetheart Rio raj YSR

ஸ்வீட்ஹார்ட் டிரைலர்: ரியோவுக்கும், ரெஞ்சி பணிக்கருக்கும் பிரேக் அப் ஆன நிலையில், மீண்டும் தனது பழைய காதலை புதுப்பிக்க ரியோ அடுக்குமாடி கட்டடத்தில் ஏறி காதலியை பார்க்க செல்கிறார் இந்த நேரத்தில். ரெஞ்சி பணிக்கரின் குடும்பத்தினர் அவருக்காக பிறந்தநாள் வாழ்த்து சொல்ல சஸ்பென்ஸ் ஆக அவர் இருக்கும் அறையை திறக்கின்றனர். கதவை ஓபன் பண்ணா செம சஸ்பென்ஸ் குடும்பத்தினருக்கு காத்திருக்கிறது.

காதல், ரொமான்ஸ் ரிப்பீட்டு: டிரைலரில் முழுக்க படுக்கயறை காட்சிகளும், காதல், பிரேக் அப் பின்பு ரொமான்ஸ் என மீண்டும் மீண்டும் இடம்பெறுகின்றன. காதல் ரொமாண்டிக் காமெடியாக படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்வீட்ஹார்ட் படத்தில் ரியோ இவ்வளவு ஓபனா நடிப்பார் என்றும் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஜாலியான படமாக உருவாகியுள்ளது. இன்றைய 2கே கிட்ஸ் செய்யும் காதலை போன்று காட்சிகள் இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.

மேட்டர் தான் ஹீரோ: ஜோ படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்த வெற்றிக்காக காத்திருக்கும் ரியோ ராஜ். அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் ஸ்வீட்ஹார்ட் படத்தில் இடம்பிடித்த கிஸா பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. கல்லூரி விழாவில் இப்பாடலுக்கு ரியோ ராஜ் நடனம் ஆடி அசத்தினார். இப்படத்தில் ரொமான்ஸ் காட்சிகளில் பட்டையை கிளப்பியுள்ளார் ரியோ. மேஜிக் இருந்தாலும் இல்லாட்டியும் அது நடக்கும் என சொல்லும் கிங்ஸ்லி காமெடி கலவரத்தை ஏற்படுத்துகிறது.

Sweetheart Rio raj YSR

கர்ப்பம்: நடிகை கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததும் ரியோ பதறுகிறார். எப்படி எப்படி இது நடந்தது. நான் தான் மேஜிக் போட்டிருந்தேன் என கூறுகிறார். கர்ப்பத்தை கலைக்க ரியோவின் அக்காவிடமே ஐடியா கேட்பது, இதனால், இருவரும் பிரிந்துவிட்டனரா அல்லது வேறு காரணமா, ஒரு பக்கம் நடிகையின் குடும்பம் செய்யும் சேட்டைகள் டிரைலரில் இடம்பிடித்துள்ளன. லவ்டுடே, டாடா, பட வரிசையில் ஸ்வீட்ஹார்ட் படமும் இருக்கும் என நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.

யுவன் இசை: பியார் பிரேமா காதல் படத்திற்கு பிறகு யுவன் தயாரிப்பில் உருவாகியுள்ள ஸ்வீட்ஹார்ட் திரைப்படம் இளைஞர்களை வசீகரிக்கும் வகையிலான காதல் படமாக இருக்கும் என்ற ஆவல் அதிகரித்துள்ளது. இப்படம் மார்ச் 14ஆம் தேதி வெளியாகும் என டிரைலரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Read more about: rio raj ysr
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X