மனசுக்கு வயசில்ல..பறவைக்கு திசை இல்ல..அஜித்துக்கே டஃப் கொடுக்கும் விஜய்யின் தந்தை!
சென்னை : இயக்குநர் எஸ்.ஏ.சந்திர சேகர் நடிகர் அஜித்துக்கே டஃப் கொடுக்கும் வகையில் இமயமலைக்கு பைக் ரைட் சென்றுள்ளார்.
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திர சேகர். ரஜினிகாந்த், விஜயகாந்த்,சத்யராஜ் என முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படத்தை இயக்கி உள்ளார்.
சமீபகாலமாக தனது மகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவருடன் பேசாமல் இருந்து வருகிறார்.

எஸ்.ஏ.சந்திரசேகர்
எஸ்.ஏ.சந்திரசேகர்1981ம் ஆண்டு சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தை இயக்குநராக அறிமுகமானார். பெரும்பாலும் இவர் இயக்கும் படத்தில் சமூக கருத்துக்கள் மேலோங்கி இருக்கும். இதனால் புரட்சி இயக்குநர் என சினிமா வட்டாரத்தில் பெயர் எடுத்தார். இவர், இயக்கிய பெரும்பாலான திரைப்படங்களில் விஜய்காந்தே நடித்திருப்பார். இதனால், அந்த காலகட்டத்தில் இவர்கள் இருவரின் காம்பினேஷன் படம் பட்டையை கிளப்பும்.

நான் கடவுள் இல்லை
இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராக விளங்கிக் கொண்டிருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் கடைசியாக ஜெய் நடிப்பில் வெளியான கேப்மாரி என்ற படத்தை இயக்கினார். இதையடுத்து, சமுத்திரக்கனி ஹீரோவாக நடித்து உள்ள நான் கடவுள் இல்லை என்ற படத்தை தற்போது இயக்கியுள்ளார். அதிரடி ஆக்ஷன் கதை களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் இனியா மற்றும் சாக்ஷி அகர்வால் என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். விரைவில் நான் கடவுள் இல்லை படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

யார் இந்த எஸ்.ஏ.சி
இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் பலருக்கும் பரிச்சயமாகி இருந்த இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் யார் இந்த எஸ்.ஏ.சிஎன்ற யூ டியூப் சேனலை தொடங்கினார். இந்த சேனலில், தான் வாழ்க்கையில் சந்தித்த பிரச்சினைகள் குறித்தும் கடந்து வந்தபாதையை பற்றியும் பேசி இருந்தார். இதில் ஒவ்வொரு எபிசோடும் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

அஜித்துக்கே டஃப் கொடுப்பார் போல
இந்நிலையில், இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். இமயமலைக்கு சென்றுள்ள அவர் ராயல் என்பீல்டு பைக் முன் அமர்ந்து போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் பல லைக்குகளை குவித்து வரும் நிலையில், எஸ்.ஏ.சி போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், அஜித்துக்கே டஃப் கொடுப்பார் போலயே என கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











