twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எங்களைப் பார்த்து அவர்களுக்கு பயம்.. அதனால்தான் அழிக்கப் பார்க்கிறார்கள்: எஸ்.ஏ.சி. பரபரப்பு பேச்சு

    அரசியல்வாதிகள் தான் சினிமாவை அழிக்க நினைக்கிறார்கள் என எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

    |

    Recommended Video

    Kappathunga Naalaya Cinema:எங்களைப் பார்த்து அரசியல்வாதிகளுக்கு பயம்-எஸ்.ஏ.சி பரபரப்பு பேச்சு-வீடியோ

    சென்னை: பயம் காரணமாக அரசியல்வாதிகள் தான் சினிமாவை அழிக்க நினைக்கிறார்கள் என இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

    இயக்குனர்கள் ஏ.வெங்கடேஷ், பேரரசு, கே.ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் காப்பாத்துங்க நாளைய சினிமாவை. தமிழ் திரையுலகின் பொதுநலன் கருதி, திரைப்படங்களை சட்டவிரோதமாக அனுமதி இல்லாமல் இணையத்தில் பதிவேற்றப்படுவதை தடுப்பதற்காக ஒரு மணி நேர விழிப்புணர்வு படமாக இது உருவாகியுள்ளது.

    இப்படத்தின் சிறப்பு திரையிடல் சென்னை வடபழனியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், சினிமா நடிகர்களை பார்த்து அரசியல்வாதிகள் பயப்படுவதாகக் கூறினார்.

    மெர்சல், காலாவை அடுத்து என்.ஜி.கே.வுக்கு எமோஜி கொடுத்த ட்விட்டர் மெர்சல், காலாவை அடுத்து என்.ஜி.கே.வுக்கு எமோஜி கொடுத்த ட்விட்டர்

    தமிழ் ராக்கர்ஸ்:

    தமிழ் ராக்கர்ஸ்:

    இதுகுறித்து அவர் பேசியதாவது, "எத்தனை படங்கள் எடுத்தாலும், எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் சினிமா திருட்டை ஒழிக்க முடியவில்லை. படம் ரிலீசாவதற்கு ஒருநாள் முன்பே தமிழ் ராக்கர்சில் வெளியாகிறது. அவன் சொல்லி அடிக்கிறான்.

    எம்.ஜி.ஆர் ஆட்சி:

    எம்.ஜி.ஆர் ஆட்சி:

    இதற்கு காரணம் அரசியல்வாதிகள் தான். எத்தனை முறை ஆட்சி மாறினாலும் சினிமா திருட்டை ஒழிக்க முடியவில்லை. எம்.ஜி.ஆருக்கு பிறகு, வேறு எந்த ஆட்சியாளர்களும் சினிமாவுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை.

    அரசியல்வாதிகளுக்கு பயம் :

    அரசியல்வாதிகளுக்கு பயம் :

    அரசியல்வாதிகளுக்கு சினிமாக்காரர்களை பார்த்து பயம். எங்கே நம்ம இடத்துக்கு இவர்கள் வந்துவிடுவார்களோ என்ற பயம். சினிமாக்காரர்களின் ஓட்டு அரசியல்வாதிகளுக்கு தேவையில்லை. அதை அவர்கள் கள்ள ஓட்டாகப் போட்டுக்கொள்வார்கள்.

    சந்தேகம்:

    சந்தேகம்:

    தமிழ்ராக்கர்ஸ்க்கு அரசியல்வாதிகள் தான் ஏஜெண்டாக இருப்பார்கள் என நான் நினைக்கிறேன். இல்லை என்றால் அவர்களால் இத்தனை தைரியமாக செயல்பட முடியாது. அரசியலில் நல்லவர்கள் இப்போது இல்லை.

    கருத்துக்கணிப்பு :

    கருத்துக்கணிப்பு :

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு வெளியாகியுள்ளது. தேர்தல் முடிவுகள் தவறாகத் தான் இருக்கும் என நினைக்கிறேன். தமிழ்நாடு மட்டும் தப்பித்துக்கொள்ளும் என நினைக்கிறேன். கூடிய விரைவில் நாம் எல்லோரும் காவியை கட்டிக்கொண்டு தான் அழையப் போகிறோம்", என அவர் கூறினார்.

    English summary
    Actor Vijay's father director S.A.Chandrasekar accussed taminadu politicians that they are trying to destroy tamil cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X