twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மோடிக்கு நோ.. அப்போ நாடாளுமன்றத் தேர்தலில் விஜய்யின் ஆதரவு யாருக்கு..?: எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி!

    நாடாளுமன்றத் தேர்தலில் விஜய்யின் ஆதரவு யாருக்கு என எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டியளித்துள்ளார்.

    |

    Recommended Video

    நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார்- தந்தை சந்திரசேகர் பேட்டி- வீடியோ

    நெல்லை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர்.

    நடிகர் விஜய் அரசியலில் ஈடுபடுவார் என்ற எதிர்பார்ப்பு நீண்டகாலமாக அவரது ரசிகர்கள் மத்தியில் உள்ளது. அதனை உறுதி செய்வது போல், சமீபகாலமாக அவரது படங்களில் அரசியல் நெடி சற்று அதிகமாகவே உள்ளது. சர்காரில் நேரடியாகவே ஆளும்கட்சி பற்றி விமர்சிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், நெல்லை மாவட்டம், வடக்கன்குளம் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான சந்திரசேகரும், அவரது மனைவி ஷோபாவும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    தமிழ் ராக்கர்ஸ்:

    தமிழ் ராக்கர்ஸ்:

    இந்த நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களைச் சந்தித்தார் சந்திரசேகர். அப்போது அவர், "கடந்த 40 ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்து வருகிறேன். அப்போது நாணயம் இருந்தது. தற்போது 'தமிழ் ராக்கர்ஸ்' படங்களைப் போட்டி போட்டு சமூக வலைதளங்களில் வெளிடுவதால்தான் சினிமா அழிந்து வருகிறது.

    சினிமா வியாபாரிகள்:

    சினிமா வியாபாரிகள்:

    சினிமாவை காப்பாற்ற வேண்டும் என்றால் அரசால் தான் முடியும். சமீபகாலத்தில் சினிமா துறையில் வியாபாரிகள் வந்துவிட்டனர். சினிமா என்பது காதலித்து செய்யக் கூடியது. தமிழ் ராக்கர்சை அரசால் தான் ஒழிக்க முடியும்.

    தமிழர்களின் முடிவு:

    தமிழர்களின் முடிவு:

    வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கக் கூடாது என்பதுதான் தமிழர்களின் முடிவு. இதில் அனைவரும் தெளிவாக உள்ளனர். தற்போதைய ஆட்சியில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினர் மிகவும் அச்சமடைந்துள்ளனர். சமூகத்திற்கு நல்லது செய்கிறவர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம்.

    விஜய்யின் ஆதரவு:

    விஜய்யின் ஆதரவு:

    வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விஜய்யின் ஆதரவு யாருக்கு? என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். எனது மகன் விஜய்யை டாக்டராக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால், அவர் ஆக்டராகிவிட்டார்" என இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

    அரசியல் பிரவேசம்:

    அரசியல் பிரவேசம்:

    ஏற்கனவே கடந்தாண்டு நெல்லையில் பேசிய சந்திரசேகர், ‘விஜய் அரசியலுக்கு வந்தால் ஏன் எதிர்க்கிறார்கள்? ஊழலற்ற அரசியல் வேண்டும் என்பதால் அவர் அரசியலுக்கு வரவேண்டும்' எனத் தெரிவித்திருந்தது நினைவுக்கூரத்தக்கது.

    English summary
    Director Chandrasekar says that actor Vijay will take his decision on his stand in lokshaba elecion 2019.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X