சங்கீதாவை பிரிந்துவிட்டாரா விஜய்?.. உறுதி செய்தாரா எஸ்.ஏ.சந்திரசேகர்?.. ஷாக் ரியாக்‌ஷன்

சென்னை: தமிழக வெற்றி கழகம் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் தொடர்ந்து திமுகவையும் பாஜகவையும் தான் ஏறும் மேடைகளில் விளாசிவருகிறார். அதற்கு திமுகவினரும் தங்களது பதிலடியை கொடுத்துவருகிறார்கள். முக்கியமாக விஜய் தனது மனைவி சங்கீதாவை பிரிந்துவிட்டார் என்றே அவர்கள் கூறிவருகிறார்கள். ஆனால் அதிலெல்லாம் உண்மை இல்லை என்பது விஜய் தரப்பு வாதம். இந்தச் சூழலில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியிருக்கும் விஷயம் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

லண்டன் வாழ் தமிழரான சங்கீதாவை விஜய் திருமணம் செய்துகொண்டார். லவ் டுடே ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு ரசிகையாக விஜய்யை சந்திக்க வந்த சங்கீதாவை சந்திரசேகருக்கும், ஷோபாவுக்கும் பிடித்துப்போக அவரையே தங்களது மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்கள். அதற்கு சங்கீதாவும், விஜய்யும் இசைவு தெரிவித்ததன் காரணமாக அவர்களது திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், சாஷா என்கிற மகளும் இருக்கிறார்கள்.

Vijay Sangeetha S A Chandrasekhar

ஃபேவரைட் ஜோடி: கடந்த 1999ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது. அதற்கு பிறகு கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடிகளில் ஒன்றாக அவர்கள் வலம் வருகிறார்கள். விஜய்யும் தன்னுடைய படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கெல்லாம் சங்கீதாவை மறக்காமல் அழைத்துக்கொண்டுவருவார். அதுமட்டுமின்றி நண்பன் பட விழாவின்போதுகூட விஜய்யுடன் நடித்த நடிகைகளில் தனக்கு ஜெனிலியாவைத்தான் ரொம்ப பிடிக்கும் என்று சங்கீதாவும் கூறியிருந்தார். இப்படி அவர்கள் தங்களது வாழ்க்கையை நிம்மதியாக நகர்த்துகிறார்கள்.

ஆரம்பித்த பிரச்னை: ஆனால் லியோ படத்துக்கு பிறகு அவர்கள் இரண்டு பேருக்கும் பிரச்னை வெடித்துவிட்டதாக கிசுகிசுக்கள் பரவின. அதாவது அப்படத்தில் திரிஷாவுடன் விஜய் மீண்டும் நடித்தது சங்கீதாவுக்கு பிடிக்கவில்லை என்றும்; அதன் காரணமாக கோபித்துக்கொண்டு லண்டனுக்கே சங்கீதா சென்றுவிட்டார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அதில் துளியளவுக்கூட உண்மையில்லை என்று விஜய்யின் ரசிகர்கள் தொடர்ந்து கூறிவருகிறார்கள். விஜய்யும் இதுகுறித்து மௌனமே சாதித்துவருகிறார்.

வராத சங்கீதா: பொதுவாக தனது கணவரின் பட விழாவுக்கே தவறாமல் வந்துவிடக்கூடிய சங்கீதா; விஜய் தொடங்கிய கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கு வரவில்லை. அதேபோல் தன்னுடைய மகன் இயக்கவிருக்கும் முதல் படத்துக்கும் விஜய் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது இரண்டு பேருக்குமிடையே கண்டிப்பாக பிரச்னை இருக்கிறது என்று கொளுத்திப்போட்டார்கள். முக்கியமாக விஜய் தீவிரமாக எதிர்த்துவரும் திமுகவினர்; இந்தப் பிரச்னையையும் அதிகமாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

எஸ்.ஏ.சி ரியாக்‌ஷன்: இந்நிலையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் ஒரு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியின்போது விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு சங்கீதா என்ன சொன்னார் என்று கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு எஸ்.ஏ.சியோ, 'வேண்டாம் வேண்டாம்' என்று அந்தக் கேள்வியை தவிர்த்துவிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள்; சந்திரசேகர் எதற்காக சங்கீதா பற்றிய கேள்வியை தவிர்க்க வேண்டும். ஒருவேளை விஜய்யும், சங்கீதாவும் பிரிந்திருப்பதை மறைமுகமாக உணர்த்தியிருக்கிறாரோ என்று சந்தேகத்துடன் கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X