விஜய் எல்லாத்தையும் விட்டு வந்து இருக்காரு.. எஸ்.ஏ. சந்திரசேகர் சொன்ன அந்த வார்த்தை!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 3 மணி நிலவரப்படி மாலை 70% வாக்குகள் பதிவாகி உள்ளது. பொதுவாக 12 மணி முதல் 3 மணிக்கு வாக்குப்பதிவு மந்தமாக பதிவாகும் நிலையில் இந்த முறை தொடர்ந்து விறுவிறுப்புடன் அதிக வாக்குகள் பதிவாகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எஸ்.எஸ்.சந்திரசேகர்: இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் தந்தை எஸ்.எஸ்.சந்திரசேகர், மனைவி ஷோபாவுடன் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், தேர்தல் மிகவும் அமைதியாக நடந்து கொண்டு இருக்கிறது. அதை பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் விஜய் அரசியலுக்கு வந்து இருக்கிறார். மக்கள் தான் இனி என்ன செய்ய வேண்டும் என முடிவு எடுக்க வேண்டும். இந்த நேரத்தில் நான் எதையுமே சொல்ல கூடாது.

Vijay TVK S A Chandrasekhar

இனி மக்கள் கையில்: அடுத்து என்ன நடக்கும் என்பதை சொல்லவே முடியாது. நம் தற்போது ஜனநாயக கடமையை நிறைவேற்றி இருக்கிறோம். அவரும் மக்களுக்காக எதையாவது செய்ய வேண்டும் என நினைத்து தொழிலை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்து இருக்கிறார். அதை நினைக்கும் போது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், மற்ற தேர்தலை விட இந்த தேர்தலில் வாக்குப்பதிவு அதிகமாக நடந்து கொண்டு இருக்கிறது. அதற்கு காரணம் விஜய் தான். இதுவரை ஓட்டு போடாதவர்கள் கூட இந்த தேர்தலில் ஓட்டு போட வேண்டும் என வந்து இருக்கிறார்கள்.

சந்தோஷமா இருக்கு: கடந்த இரண்டு வருடமாகவே அரசியலில் ஈடுபாடு இல்லாதவர்கள் கூட, அரசியலை கற்றுக்கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டார்கள். அது ஆரோக்கியமான விஷயம் இந்த நேரத்தில் எந்த விதமான கருத்தையும் என்னால் சொல்ல முடியாது பொதுமக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். நானும் சந்தோஷமாக இருக்கிறேன் என எஸ்.ஏ.சந்திரசேகர் செய்தியாளர்களிடம் பேசினார். இயக்குநரும் நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more about: vijay tvk விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X