எல்லாமே நாடகம்.. விஜய் புஸ்ஸி ஆனந்தை நம்ப காரணம் என்ன தெரியுமா? எஸ்.ஏ.சந்திரசேகர் பளீச்!
சென்னை: இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனும் நடிகருமான விஜய், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருக்கிறார். அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கிய இவர், கையில் இருக்கும் படத்தை முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். விஜய்யின் அரசியல் வருகை குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்த எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் புஸ்ஸி ஆனந்தை நம்ப காரணம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உள்ளார். இவரின் இயக்கத்தில் உருவான நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஆரம்பத்தில் இவர் நடித்த அனைத்து படங்களும் தோல்வி படங்களாக இருந்ததால், விஜய்யால் திரையில் பெரியளவில் பிரகாசிக்க முடியாமல் போனது. ஆனால், அந்த நேரத்தில் விஜய்யின் வெற்றிக்கு உதவியாக இருந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர் தான்.

அப்பாவை விட்டு விலகிய விஜய்: அதன்பின் பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வளர்ந்தார். சினிமாவில் நடிப்பது மட்டுமே விஜய்யின் வேலை. கதை கேட்பது, சம்பளம் நிர்ணயிப்பது, கால்ஷீட் தேதி கொடுப்பது என எல்லாவற்றையுமே எஸ்.ஏ.சி பார்த்துக்கொண்டார். ஆனால், ஒரு கட்டத்தில் விஜய்க்கு இது பிடிக்காததால், அப்பாவை கழட்டிவிட்டுவிட்டு, நீலங்கரையில் தனி பங்களா கட்டி அங்கு குடியேறினார். அதோடு, அப்பாவை பார்ப்பதையும், பேசுவதையும் தவிர்த்தார். இது தொடர்பாக பல பேட்டிகளிலும் புலம்பி வந்தார் எஸ்.ஏ.சி.
எஸ்.ஏ.சந்திரசேகர்: தற்போது விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், சந்திரசேகர் புஸ்ஸி ஆனந்த் எப்படிப்பட்டவர் என்பதை கூறியுள்ளார். அதில், நான் புஸ்ஸி ஆனந்த் மேல வேண்டும் என்றே குற்றம் சொல்லுவதாக நினைக்கலாம். ஆனால், உண்மை என்னவென்று உங்கள் அனைவருக்கும் தெரியும். அவர் ஆன்லைன் க்ரூப் மூலமாக தன்னை சப்போர்ட் செய்து கொள்கிறார். அதற்கு என்று தனிக்குழுவை புஸ்ஸி ஆனந்த் வைத்து இருக்கிறார். அந்த ஆன் லைன் க்ரூப்பில் விஜய்யும் இருக்கிறார்.
எல்லாம் நாடகம்: எந்த ஒரு அரசியல்வாதியும் செய்யாததை புஸ்ஸி ஆனந்த் செய்வார். ரசிகர் மன்றத்திற்கு வரும் புஸ்ஸி ஆனந்த், களைத்துப்போய் அங்கு இருக்கும் மேஜையில் படுத்து இருப்பார். இதை, ஒருவர் போட்டோ எடுத்து, அந்த ஆன்லைன் க்ரூப்பில் ஷேர் பண்ணி, அதை 50 பேரை வைத்து ஷேர் செய்வார், 100 பேரை வைத்து லைக் பண்ண சொல்கிறார். இது ஒரு நாடகம், இந்த நாடகம் உண்மையாக்கப்படுகிறது.
மனவருத்தமாக இருக்கு: இதைப்பார்க்கும் விஜய், நமக்காக உழைத்து களைத்துப்போய் இப்படி கீழே படுத்து இருக்கிறாரே என்று அவரைப்பற்றி பெருமையாக நினைத்து கொண்டு, அண்ணே நாளையில் இருந்து என்கூட இருங்க என்றார். இது தான் நடக்கிறது. இதுபோன்ற நபர் அவருடன் இருக்கும் போது, நாளை விஜய்யின் எதிர்காலம் என்ன ஆகும் என்கிற பயம் எனக்கு இருக்கு என்று எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு பேட்டியில் மன வருத்தத்துடன் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











