வேறு வழியே இல்லை.. விஜய்யை வைத்து அதான் அப்படி செய்தேன்.. எஸ்.ஏ.சந்திரசேகர் ஓபன் டாக்
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அந்தக் கட்சி களமிறங்குகிறது. பாஜகவும், திமுகவும்தான் தன்னுடைய அரசியல் எதிரி என்பதை கட்சியின் முதல் மாநாட்டில் தெளிவுப்படுத்திவிட்டார் அவர். இதனால் அந்தக் கட்சியினருக்கும், திமுகவினருக்கும் இடையே கடுமையான வார்த்தை போர் நடந்துவருகிறது. இடையில் சீமானும் விஜய்யை அவ்வப்போது விமர்சனம் செய்கிறார். இப்படி முழுக்க முழுக்க அரசியல்வாதியாக மாறிவிட்ட விஜய் இப்போது ஜன நாயகன் என்கிற படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படம்தான் அவரது கடைசி படம் என்று கூறப்படுகிறது.
சினிமாவில் மும்முரமாக நடித்துவந்த விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். இனி முழுக்க முழுக்க அரசியல்வாதியாக மாறப்போகும் விஜய் அதன் காரணமாக இன்னும் ஒரே ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்தை ஹெ.வினோத் இயக்கிவருகிறார். படத்துக்கு ஜன நாயகன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அடுத்த வருட பொங்கலுக்கு படம் ரிலீஸாகவிருக்கிறது. தற்போது படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்க; பாபி தியோல் வில்லனாக நடிக்கிறார். கேவிஎன் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்கிறது. கண்டிப்பாக இந்தப் படத்தை ஹிட் படமாக கொடுத்துவிட வேண்டும் என்று விஜய் மும்முரமாக இருக்கிறார்.
கட்சி தொடங்கிய விஜய்: அரசியலில் இறங்கியதை அடுத்து அந்த பணிகளில் முழு கவனம் செலுத்த ஆரம்பித்தார். அந்த வகையில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் கடந்த வருடம் நடத்தினார் அவர். அதில் பேசும்போது தன்னுடைய அரசியல் எதிரி என்றால் அது பாஜகவும், திமுகவும்தான் என்று ஓபனாக போட்டுடைத்தார். இப்படி ஒன்றியத்தில் ஆளும் அரசையும், மாநிலத்தில் ஆளும் அரசையும் ஒருசேர எதிர்க்கிறாரே அவரது கடைசி படத்தின் ரிலீஸுக்கு கண்டிப்பாக சிக்கல் வருமே என்று பலரும் பேசினார்கள். அதேசமயம் தனது படம் பற்றிய கவலை எதுவும் இல்லாமல் ஒரு ஸ்டாண்ட் எடுத்தால் அதில் தீர்க்கமாக இருக்கிறாரே என்று ஒருதரப்பினர் ஆச்சரியமும் பட்டார்கள்.
விமர்சனத்தை சந்தித்த விஜய்: திமுகவை தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டிலேயே எதிர்க்க ஆரம்பித்த விஜய்யை பார்த்த திமுகவினரும் தங்களது பதிலடியை கொடுக்க ஆரம்பித்தார்கள். முக்கியமாக ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் நிவாரண உதவிகளை வழங்கினார். ஆனால் பனையூரில் இருக்கும் தனது அலுவலகத்துக்கு மக்களை வரவழைத்து அதனை செய்தார். அது பெரும் விமர்சனத்தை சந்தித்தது. முக்கியமாக, 'அரசியலில் விஜய் Work From Home செய்கிறார்' என்றும் கிண்டல் செய்தார்கள். ஆனால் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட ட்வீட் ஒன்றை போட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்: அந்த விவகாரத்துக்கு பிறகு எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தகம் சமீபத்தில் வெளியானது. இதில் விசிக தலைவர் திருமாவளவன், விஜய் உள்ளிட்டோர் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் திருமாவளவன் இதில் பங்கேற்கவில்லை. விஜய் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டார். அதன் பிறகு பேசிய அவர், 'இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில்கூட திருமாவளவன் கலந்துகொள்ள முடியாத அளவுக்கு அவருக்கு பிரஷர் தரப்படுகிறது' என்று கூறினார். மேலும் திமுகவையும் ஓபனாக வேவிமர்சனம் செய்தார். அதனையடுத்து பனையூருக்கு சென்றபோதும் திமுகவை தவெக தலைவர் விஜய் விட்டு வைக்கவில்லை. இதனால் தமிழ்நாடு அரசியல் களம் திமுக Vs தவெக என்கிற நிலைக்கு நகர ஆரம்பித்தது.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்: மாநில மாநாடு, புத்தக வெளியீட்டு விழா, பனையூர் பயணம் ஆகியவற்றில் அவர் திமுகவை விமர்சிக்கும்போதெல்லாம் ஸ்டாலினையும் மறைமுகமாகவே சாடிக்கொண்டிருந்தார். அதனை கவனித்த திமுகவினர் முதலமைச்சர் பெயரை சொல்லவே தைரியம் இல்லை என்று பேச ஆரம்பித்தார்கள். இந்த விஷயமும் விஜய்யின் காதுகளுக்கு சென்றது. அப்படிப்பட்ட சூழலில்தான் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய விஜய்யோ, 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே' என்று முதலமைச்சர் ஸ்டாலினை ஓபனாகவே விமர்சனம் செய்துவிட்டார். விஜய் அப்படி பேசியதை வைத்து திமுகவினர் தீவிரமாக களமாட ஆரம்பித்திருக்கிறார்கள்.

தந்தையுடன் சண்டை: குறிப்பாக விஜய் அவரது மனைவி சங்கீதாவுடன் பேசுவதில்லை என்ற கிசுகிசு கடந்த சில காலமாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. அதேபோல் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருடன் விஜய்க்கு அவ்வப்போது மனஸ்தாபங்கள் எழுவதும் வழக்கம். ஆக சங்கீதா மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் விவகாரங்களை திமுகவினர் கையில் எடுத்து; விஜய்யால் தனது குடும்பத்துக்கே உண்மையானவராகவும், நன்றியுள்ளவராகவும் இருக்க முடியவில்லை. இவர் எப்படி தமிழ்நாட்டை காப்பார் என்று திமுகவினர் விளாசுகிறார்கள். இந்நிலையில் விஜய் குறித்து இயக்குநரும், அவரது தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
எஸ்.ஏ. சந்திரசேகர் பேச்சு: ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் பேசுகையில், "எனது மகன் விஜய்யை நானே சினிமாவில் அறிமுகப்படுத்தாமல் இன்னொரு இயக்குநரின் இயக்கத்தில் அறிமுகப்படுத்தலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அது அவ்வளவு லேசுப்பட்ட காரியமாக இல்லை. அவரது ஃபோட்டோக்கள் அடங்கிய ஆல்பத்தை எடுத்துக்கொண்டு எத்தனையோ இயக்குநர்களிடம் சென்றேன். ஆனால் அவர்கள் யாரும் விஜய்யை அறிமுகப்படுத்துவதற்கு தயாராக இல்லை அதனையடுத்து விஜய்யை நானே சினிமாவில் அறிமுகம் செய்ய முடிவெடுத்தேன். வேறு வழியே இல்லாமல்தான் விஜய்யை எனது இயக்கத்தில் அறிமுகம் செய்தேன்" என்றார்.

சுமூகமான உறவு?; முன்னதாக விஜய்க்கும் அவரது தந்தைக்கும் பிரச்னைகள் வந்து ஓய்ந்திருந்தன. கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கு எஸ்.ஏ.சியும், ஷோபாவும் வந்திருந்தார்கள். அவர்களது வருகையை பார்த்த விஜய் ரசிகர்கள் எப்படியோ அவர்கள் குடும்பத்தில் பிரச்னை எதுவும் இல்லை என்று உணர்ந்துகொண்டனர். மேலும் தவெகவில் எஸ்.ஏ.சி இணைந்து பணியாற்றுவார் என்று எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு எஸ்.ஏ.சி ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார். அவர் சில வாரங்களுக்கு முன்பு அளித்த ஒரு பேட்டியில், "விஜய்யின் பெயரை வைத்து புஸ்ஸி ஆனந்த் சம்பாதிக்கிறார் என்று எனக்கு தெரிய ஆரம்பித்தது. அதனையடுத்து விஜய்யை நான் எச்சரித்தேன். அவர் கேட்கவில்லை என்னைவிட அவர் புஸ்ஸி ஆனந்த்தைதான் அதிகம் நம்புகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக விஜய் படங்களின் ரசிகர் ஷோ டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. நான் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போகிறேன்" என்று கூறியிருந்ததும்; அந்தப் பேட்டி விஜய் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











