Vijay - விஜய்யுடனான சண்டைக்கு இதுதான் காரணம் - உண்மையை போட்டுடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்
சென்னை: Vijay (விஜய்) தனக்கும், விஜய்க்கும் சண்டை வந்ததற்கான காரணம் குறித்து இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்திருக்கிறா.ர்
கோலிவுட்டின் டாப் 3 ஹீரோக்களில் ஒருவர் விஜய். கமர்ஷிய கிங்காக வலம் விஜய், தனது படங்கள் மூலம் சராசரியாக 300 கோடி ரூபாயை வசூலிப்பவர். சமீபத்தில் அவர் நடித்த வாரிசு படமும் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்ததாக வாரிசு படத்தின் தயாரிப்பு தரப்பு அறிவித்திருந்தது. அவர் இப்போது லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் பட்ஜெட்டே 300 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது.

தந்தையே துணை: விஜய் இப்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்தாலும் அவரை இந்த அளவுக்கு உயர்த்திவிட்டது என்னவோ அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்தான். விஜய்யின் கரியரில் மெகா ஹிட்டான படங்களில் எல்லாம் விஜய் நடிக்க காரணமாக இருந்தவர் சந்திரசேகர். உதாரணமாக துப்பாக்கி உள்ளிட்ட படங்களை சொல்லலாம். அதேபோல் ஆரம்பகாலத்தில் விஜய்க்காக பல இயக்குநர்களிடம் எஸ்.ஏ.சி நேரடியாக சென்று வாய்ப்பு கேட்டதும் கவனிக்கத்தக்கது.
குடும்ப பிரச்னை: இப்படி விஜய்க்கு எல்லாமுமாக இருந்த எஸ்.ஏ.சந்திரசேர் இப்போது அவரை விட்டு விலகியிருப்பதாக கூறப்படுகிறது. ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வருவதெல்லாம் சும்மா ஃபார்மலிட்டுக்குதான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர். இருவருக்கும் முட்டிக்கொண்டதற்கு பல காரணங்கள் யூகங்களாக கூறப்படுகின்றன. ஆனால் தங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை எஸ்.ஏ.சி தொடர்ந்து மேடையில் பேசிவருகிறார்.

ஏன் புகைப்படம் இல்லை?: இந்தச் சூழலில் விஜய் சமீபத்தில் தனது தாய் ஷோபாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அது ஷோபா - எஸ்.ஏ.சி ஆகியோரின் திருமண நாளை முன்னிட்டு எடுத்துக்கொண்ட புகைப்படம் என கூறப்பட்டது. அதன் மூலம் குடும்பத்துடன் இருந்த பிணக்கு தீர்ந்துவிட்டதாக விஜய் ரசிகர்கள் கணக்கு போட்டனர்.
ஆனால் ஷோபாவுடன் மட்டும் புகைப்படம் எடுத்துக்கொண்ட விஜய் ஏன் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருடன் எடுத்துக்கொள்ளவில்லை என்ற கேள்வி எழுந்தது. அன்றைய தினம் எஸ்.ஏ.சி வெளியூரில் இருந்ததால் புகைப்படம் எடுக்கவில்லை என ஷோபா தெரிவித்திருந்தார்.
என்ன காரணம்?: இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், "விஜய்யின் சிறு வயது முதலே விஜய் எப்படி நடிக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் என அனைத்து விஷயங்களுக்கும் நான்தான் ஆலோசனை கொடுப்பேன். ஆனால் அவர் திருமணம் ஆன பிறகு ஒரு வளர்ந்த மனிதராக சுயமாக அவருக்கான முடிவுகளை எடுக்க நினைத்தார். அப்பொழுது நான் ஒரு தந்தை என்பதால் அவரது பல முடிவுகளில் உள்ளே புகுந்து அவற்றை மாற்றுவது குறித்து பேசினேன்.
அதனால்தான் சண்டை: இதேமாதிரி அடிக்கடி நடக்கும்போது எங்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை உருவானது. சொல்லப்போனால் முழுக்க முழுக்க விஜய்க்கும் எனக்கும் நடக்கும் சண்டைக்கு காரணமே நான்தான். ஒரு தந்தையாக அவருக்கு ஆலோசனை கூறாமல் என்னாலும் இருக்க முடியாது அவருடைய நல்லதுக்காகதான் நான் அதை கூறுகிறேன்" என எஸ்.ஏ.சி பேசியதாக இணையத்தில் தீயாய் பரவிவருகிறது.


Click it and Unblock the Notifications











