Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி

சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறார். நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத தவெக 2026ஆம் ஆண்டு நடக்கும் தமிழ்நாடு சட்டபேரவைத் தேர்தலில் களம் காண்கிறது. தமிழ்நாடு அரசியலில் விஜய் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறார் என்பதுதான் பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. சூழல் இப்படி இருக்க விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் முதன்முறையாக மௌனம் கலைத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருப்பவர் விஜய். பல நூறு கோடி ரூபாய் அவர் படங்களுக்கு வியாபாரம் நடக்கும். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இந்த இடத்துக்கு வந்திருக்கும் அவர் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி மக்களுக்கு நலத்திட்ட பணிகளை செய்துவந்தார். அப்பொதிருந்தே விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்று பலரும் ஆரூடம் கூற ஆரம்பித்தனர். ஆனால் விஜய்யோ வழக்கமான சைலெண்ட் மோடிலேயே இருந்தார். இதனால் வருவாரா வரமாட்டாரா என்ற குழப்பமும் அவரது ரசிகர்களுக்கு எழுந்தது.

S A Chandrasekhar Open Talks about Vijay Political Entry and Bussy Anand

தமிழக வெற்றிக் கழகம்: ஆனால் தன்னுடைய அமைதிக்கு பிறகு பெரும் செயல் ஒன்று இருந்தது என்பதை நிரூபிக்கும் விதமாக அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். எந்தவித அலப்பறையும் படு சிம்ப்பிளாக தனது எக்ஸ் தள பக்கத்தின் மூலம் நீண்ட அறிக்கையை வெளியிட்டார். அதனை பார்த்த அவரது ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்துக்கு சென்றனர். தங்களின் எதிர்பார்ப்பை தளபதி பூர்த்தி செய்துவிட்டதாக தெரிவித்தனர்.

கடைசி படம்: அரசியலில் களமிறங்கியிருப்பதால் விஜய்யின் ரசிகர்களுக்கு ஒருபக்கம் மகிழ்ச்சி இருந்தாலும்; அவர் இன்னும் ஒரு படம் மட்டுமே நடிப்பார் என்று தெரிவித்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியது. அதேசமயம் விஜய் கண்டிப்பாக சினிமாவிலிருந்து மொத்தமாக ஒதுங்கமாட்டார். 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் நினைத்தது நடக்கவில்லை என்றால் மீண்டும் சினிமாவில் நடிக்கத்தான் போகிறார். அதனால் யாரும் பதற்றப்பட தேவையில்லை என்பது ஒருதரப்பினரின் கருத்தாக இருக்கிறது.

என்ன கொள்கை: விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்தது வரவேற்பை பெற்றது போல விமர்சனத்தையும் சந்தித்திருக்கிறது. அதாவது இப்போது கட்சியை ஆரம்பித்துவிட்டு இரண்டு வருடங்களுக்கு விடுமுறை கொடுத்திருப்பது விஜய் மட்டும்தான். முக்கியமாக அவர் என்ன கொள்கையை தனது கட்சியின் பிரதானமாக எடுத்துக்கொண்டிருக்கிறார். திராவிட கட்சிகளுடன் இணக்கமாக செல்வாரா இல்லை அந்தக் கட்சிகளை எதிர்த்து அரசியல் செய்வாரா போன்று பல கேள்விகளை இப்போதே எழுப்ப ஆரம்பித்திருக்கின்றனர்.

தனித்துதான் போட்டி: சட்டபேரவைத் தேர்தலில் அவர் தனித்து நின்று போட்டியிடவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஏனெனில் முதல் தேர்தலில் தனித்து நின்று தனது பலம் என்ன என்பதை அறிந்துகொள்ளத்தான் விஜய் விரும்புவாரே ஒழிய கூட்டணி அமைக்க விரும்பமாட்டார் என்பதை அவர்கள் காரணமாக சொல்கிறார்கள். மேலும் கமல் ஹாசனும், விஜய்யும் அரசியல் தளத்தில் இணைந்து பணியாற்றுவார்களா என்ற கேள்வியும் எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஏ.சி பேட்டி: இந்நிலையில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து எதுவும் பேசாமல் இருந்த எஸ்.ஏ.சந்திரசேகர் இப்போது மௌனம் கலைத்திருக்கிறார். அவர் அளித்த சமீபத்திய பேட்டியில், "ஆன்லைன் குரூப் ஒன்றை புஸ்ஸி ஆனந்த் வைத்திருக்கிறார். அதில் விஜய்யும் இருக்கிறார். ஒரு அரசியல்வாதிகூட இப்படி செய்யமாட்டான். புஸ்ஸி ஆனந்த் மன்றத்துக்கு வந்தவுடன் வெளியில் உள்ள பெஞ்ச்சில் அப்படியே சாய்ந்தது போல் படுத்துக்கொள்வார். ஒருவரை வைத்து அதை ஃபோட்டோவும் எடுக்க செய்வார். அந்த ஃபோட்டோவை ஆன்லைன் க்ரூப்பில் போடுவார்.

50 பேர் ஷேர், 100 பேர் லைக்: அந்தப் புகைப்படத்தை 50 பேரை ஷேரும், 100 பேரை லைக்கும் செய்ய வைப்பார். விஜய் அந்த ஃபோட்டோவை பார்த்து, 'நமக்காக இப்படி உழைத்துவிட்டு கீழே படுத்திருக்கிறாரே என்று விஜய் நினைத்து, உடனே புஸ்ஸி ஆனந்த்தை அழைப்பார்; அண்ணே நாளைல இருந்து நீங்கள் என் ரூமில் இருங்க அண்ணே' என்று சொல்வார். . இப்படித்தான் அங்கு நடந்துகொண்டிருக்கிறது. இ ப்படிப்பட்ட நபருடன் இருந்தாரென்றால் நாளை விஜய்யின் அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்ற பயம் ஒரு தந்தையாக எனக்கு இருக்கிறது" என்றார். எஸ்.ஏ.சந்திரசேகரின் இந்தப் பேட்டி பெரும் விவாதத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

More from Filmibeat

Read more about: vijay bussy anand விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X