விஜய் வீட்டுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டன.. அதிர்ச்சி கிளப்பிய எஸ்.ஏ.சந்திரசேகர்
சென்னை: S.A.Chandrasekhar On Vijay (விஜய் குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர்) நடிகர் விஜய் வீட்டுக்கு வந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன என அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
விஜய்க்கென்று கோடிக்கணக்கானவர்கள் ரசிகர்களாக இருக்கின்றனர். சமீபத்தில் அவர் நடித்த வாரிசு திரைப்படம் கலைவயான விமர்சனங்களை பெற்றது. அதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர்.

தாய் தந்தையுடன் கருத்து வேறுபாடு: இதற்கிடையே விஜய் அவரது தாய் மற்றும் தந்தையுடன் பேசுவதே இல்லை எனவும், அவர்களை சந்தித்தே பல நாட்கள் ஆகிவிட்டதாகவும் தகவல் ஒன்று தீயாக பரவியது. மேலும் அவர் தாய், தந்தை குறித்து நீதிமன்றத்திலும் முறையீடு செய்தது அதை உறுதிப்படுத்துவதாகவே அமைந்தது. அதுமட்டுமின்றி சில மாதங்களுக்கு முன்பு நடந்த எஸ்.ஏ.சி பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் விஜய் கலந்துகொள்ளாதது மிகப்பெரிய விவாதத்தை சமூக வலைதளங்களில் கிளப்பியது.
வாரிசு ஆடியோ லான்ச்: இப்படிப்பட்ட சூழலில் வாரிசு திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. அதில் ஷோபா மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகரும் கலந்துகொண்டனர். விழாவிற்கு வந்த விஜய் அனைவரையும் கட்டி அணைத்தபடி சென்றார். ஆனால் எஸ்.ஏ.சந்திரசேகரையோ, ஷோபாவையோ அவர் பெரிதாக கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்துவிட்டார் என்றும் அப்போது சர்ச்சை எழுந்தது.
தாயுடன் ஃபோட்டோ: இந்தச் சூழலில் தாய் ஷோபாவுடன் விஜய் சமீபத்தில் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்தப் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டானது. எஸ்.ஏ.சி மற்றும் ஷோபாவின் 50ஆவது திருமண நாளை முன்னிட்டு விஜய் அவர்களை சந்தித்ததாக கூறப்பட்டது. மேலும் அந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் விஜய் தனது பெற்றோர்களுடன் சமாதானமாகிவிட்டார் என்றும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

எஸ்.ஏ.சி எங்கே?: அந்தப் புகைப்படம் வெளியானதை அடுத்து சர்ச்சை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தாயுடன் மட்டும் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார் தனது தந்தையுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொள்ளவில்லை என்ற புதிய சர்ச்சை எழுந்தது. அதேசமயம், விஜய் எது செய்தாலும் அதில் வேண்டுமென்றே சிலர் குற்றம் கண்டுபிடிக்கிறார்கள் என அவரது ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர்.
பத்து வருடங்கள் ஆகிவிட்டன: இந்நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் இதுதொடர்பாக பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், "தப்பு செய்தால் ஊடகங்கள் கேள்விகள் கேட்கலாம். அதே நேரத்தில் ஏதாவது மகிழ்ச்சிகரமான செய்திகள் நடந்தாலும் அதைப்பற்றியும் கேட்கலாம். என் மகன் பத்து வருடங்கள் கழித்து எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார்.
அதுவே மகிழ்ச்சியான செய்திதான்: அதுவே எங்களுக்கு இப்போதைய மகிழ்ச்சிகரமான செய்தி. அதைப் பற்றி எந்த ஊடகமாவது செய்தியை வெளியிட்டதா? இல்லை. தாயுடன் இருக்கும் புகைப்படம் வெளியானதை பற்றி எல்லோரும் சொல்கிறார்கள். அதேபோல் நிறைய புகைப்படங்கள் இருக்கின்றன. அவை அனைத்தும் ஒவ்வொன்றாக இனி வெளியாகும்" என்றார்,


Click it and Unblock the Notifications











