விஜய்க்கு இன்று முக்கியமான நாள்.. திருத்தணியில் சிறப்பு பூஜை செய்த எஸ்.ஏ.சந்திரசேகர்!
சென்னை: தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 23ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதலே தீவிரமாக எண்ணப்பட்டு வருகின்றன. இதனால், அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இந்த முக்கியமான தருணத்தில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்யின் தந்தையும், 'இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் திருத்தணியில் சிறப்பு பூஜை செய்துள்ளார்.

சிறப்பு பூஜை: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருத்தணி முருகன் கோவில் இன்று காலை அதிகாலை சென்ற எஸ்.ஏ. சந்திரசேகர், மகன் விஜயின் அரசியல் பயணம் வெற்றியடையவும், தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியில் அமரவும் பிரார்த்தனை செய்ததாக கூறப்படுகிறது. கோவிலில் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையில் சில நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் யார் ஆட்சியை பிடிக்கப்போகிறார்கள் என அனைவரும் இந்த நாளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். வாக்கு எண்ணிக்கை 62 மையங்களில் காலை 8 மணி முதல் தொடங்கியது. இறுதி முடிவுகள் வெளியாகும் வரை அரசியல் கட்சிகள் அனைத்தும் பதட்டத்துடனும் எதிர்பார்ப்புடனும் காத்திருக்கின்றன. இந்த நிலையில், விஜயின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான நாளாக இன்று அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications