ஒவ்வொரு அசைவையும் சங்கீதா நோட்டமிடுவார்.. முதல் சாய்ஸே அதுதான்.. எஸ்.ஏ.சி ஓபன் டாக்.. இது வேறயா?

சென்னை: விஜய்க்கும், சங்கீதாவுக்கும் பிரச்னை ஏற்பட்டு விவாகரத்தில் வந்து நிற்கிறது அவர்களது திருமண வாழ்க்கை. கடந்த 20ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது அதனை ஜூன் மாதம் 15ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். அன்றைய தினம் காணொலி மூலம் ஆஜராக கோரிக்கையும் வைத்திருக்கிறது விஜய் தரப்பு. இந்நிலையில் இயக்குநரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியிருக்கும் விஷயம் ஒன்று சோஷியல் மீடியாவில் திடீரென ட்ரெண்டாகியுள்ளது.

லண்டனை சேர்ந்த சங்கீதா நடிகர் விஜய்க்கு ரசிகையாக இருந்து பிறகு மனைவியாக மாறியவர். அவரை விஜய்யின் தாய்க்கும், தந்தைக்கும் பிடித்துவிட; விஜய்யும் அவர்களது ஆசைக்காக திருமணம் செய்துகொண்டார். விஜய்க்கும் பிடித்துதான் இருந்தது. திருமணம் செய்துகொண்டு இரண்டு பிள்ளைகளையும் பெற்றார்கள். தனது கணவருக்கு காஸ்ட்யூம் டிசைனராகவும் வேலை பார்த்தார் சங்கீதா. இப்படி நல்லபடியாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை கடந்த சில வருடங்களாக பிரச்னையில் ஓடியது.

S A Chandrasekhar s Interview on Sangeetha Sornalingam Goes Viral Amid Vijay Divorce Case
Photo Credit:

விவாகரத்து பிரச்னை: சூழல் இப்படி இருக்க கடந்த பிப்ரவரி மாதம் விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று சங்கீதா மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை தாக்கல் செய்ததோடு மட்டுமில்லாமல் விஜய் மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அந்த குற்றச்சாட்டுக்களுக்கு வலிமை சேர்க்கும் விதமாக விஜய்யும், திரிஷாவும் ஜோடியாக ஒரு திருமணத்துக்கு வந்திருந்தார்கள். என்பதும் குறிப்பிடத்தக்கது. அது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.

வழக்கு விசாரணை ஒத்திவைப்பு: சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனு கடந்த 20ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விசாரணையை ஜூன் 15அம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி அறிவித்தார். அநேகமாக அன்றைய தினம் அவர்கள் இரண்டு பேருக்கும் விவாகரத்து சட்டப்பூர்வமாக கிடைத்துவிடும் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இரண்டு பேருக்கும் இடையே இதுதொடர்பாக பஞ்சாயத்து நடத்தப்பட்டு சமரசமாக சென்றுவிட்டார்கள் என்று எஸ்.ஏ.சிகூட சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.

தேர்தலில் எதிரொலிக்குமா?: இவ்வளவு அரிபரிகளுக்கு இடையே விஜய் ஒரு சட்டப்பேரவைத் தேர்தலையும் சந்தித்துவிட்டார். நேற்று நடந்த வாக்குப்பதிவில் விஜய்யின் கட்சிக்கு எவ்வளவு வாக்குகள் விழுந்திருக்கின்றன என்பது மே நான்காம் தேதி தெரிந்துவிடும். அதேசமயம் கரூர் துயர சம்பவம், சங்கீதா விவாகரத்து விஷயம், திரிஷா விவகாரம் உள்ளிட்டவைகள் எல்லாம் சேர்ந்து இத்தேர்தலில் தவெகவுக்கு கடும் பின்விளைவுகளை ஏற்படுத்தியிருக்குமோ என்ற அச்சமும் தவெகவினரிடமும் இருந்ததை நேற்று களத்தில் பார்க்க முடிந்தது.

ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் சில வருடங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டி சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. வனிதா விஜயகுமாருக்கு அவர் கொடுத்த பேட்டியில், "அவர் (சங்கீதா) ஒவ்வொரு அசைவையும் நோட்டம் விட்டுக்கொண்டே இருப்பார். அவருக்கு முதல் சாய்ஸ் யார் என்றால் குழந்தைகள்தான். அப்படிப்பட்டவர் சங்கீதா" என்று தனது மருமகளை புகழ்ந்து பேசியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X