திருமண நாள் கொண்டாடிய எஸ்.ஏ. சந்திரசேகர் - ஷோபா.. மகன் விஜய்யை காணோமேப்பா.. இந்த முறையும் வரலயா?

சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் அப்பா இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் - பாடகி ஷோபா தங்ளது திருமண நாளை ஏப்ரல் 24ஆம் தேதி கொண்டாடினர். இது அவர்களின் 56ஆவது திருமண நாள். இப்படி இருக்கையில் இவர்களின் திருமண நாள் கொண்டாட்டம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. சந்திரசேகரும் ஷோபாவும் இணைந்து கேக் வெட்டுகிறார்கள். ஆனால் இந்த கொண்டாட்டத்தில் விஜய் இல்லாதது குறித்து நெட்டிசன்கள் சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

நடிகர் விஜய் தற்போது முழுக்க முழுக்க அரசியலில் கவனமாக இருக்கிறார். அவரது தமிழக வெற்றிக் கழகம் நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டது. விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிருகிறார். தேர்தல் 23ஆம் தேதி நடைபெற்றது.

S A Chandrasekhar amp amp Shoba Chandrasekhar Celebrate 56th Anniversary Where Is Vijay

தேர்தலுக்கு அடுத்த நாளான 24ஆம் தேதி சந்திர சேகர் மற்றும் ஷோபாவின் திருமண நாள். இந்நிலையில் இவர்களின் திருமண நாள் கொண்டாட்டத்தை தேர்தல் நாள் அன்றே, அதாவது ஒரு நாள் முன்னதாகவே கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், விஜய் கலந்து கொள்ளவில்லையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விஜய் ஏன் இல்லை: ஆனால் இந்த கொண்டாட்டம் தேர்தல் நாள் அன்று நடைபெற்றது என அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளை பார்த்தாலே தெரிகிறது. தேர்தல் நாளில் விஜய் தேர்தல் பணிகளை தனது கட்சி தலைமை நிர்வாகிகளுடன் இணைந்து ஆய்வு செய்து கொண்டு இருப்பார். அப்படி இருக்கும் பட்சத்தில், அதைத் தெரிந்து கொள்ளாத நெட்டிசன்கள் தான் இவ்வாறு தேவை இல்லாமல் கேள்வி கேட்டு வருகின்றனர்.

S A Chandrasekhar amp amp Shoba Chandrasekhar Celebrate 56th Anniversary Where Is Vijay

ரசிகர்கள் பதிலடி: மேலும் இவர்களின் திருமண நாளான நேற்று விஜய் இவர்களுடன் இணைந்து கொண்டாடி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இது இவர்களின் 56ஆவது திருமண நாள், அப்படி இருக்கையில் விஜய் ஒரு நடிகராக வளர்ந்த பின்னர், தனது தாய் - தந்தையின் திருமண நாட்களில் எல்லா திருமண நாட்களிலும் கலந்து கொண்டு இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டும் என்றும் விஜய்க்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் போஸ்ட் போட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X