Jason Sanjay - விஜய்யை வைத்து படம் எடுக்காத சஞ்சய்.. சந்தோஷமாக இருந்தது.. மனம் திறந்த எஸ்.ஏ.சந்திரசேகர்
சென்னை: Jason Sanjay (ஜேசன் சஞ்சய்) விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராகியிருக்கும் சூழலில் அவர் குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.
விஜய்க்கு சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். விஜய் ஃபேமஸான நடிகராக இருப்பதால் சஞ்சய்யும் நடிகராக வலம் வருவார் என பலரால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தனது தந்தை போல் நடிகராக இல்லாமம் தாத்தா போல் இயக்குநராக வேண்டும் என்று எப்போதோ முடிவெடுத்துவிட்டார். அதனையடுத்து கனடாவில் அவர் அதுதொடர்பாக படிக்கவும் செய்தார்.

குறும்படம்: படித்துக்கொண்டிருந்தபோதே சஞ்சய்; புல் தி ட்ரிக்கர் என்ற குறும்படத்தை இயக்கினார். அதில் அவரது மேக்கிங்கும், இயக்கமும் நன்றாகவே இருந்ததாக பேச்சு எழுந்தது. மேலும் அந்த குறும்படத்தின் ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் பலரையும் ஈர்த்தது. எனவே விரைவில் இயக்குநராக அறிமுகமாகி விஜய்யை வைத்து படம் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கூற ஆரம்பித்தனர்.
லைகாவுடன் கூட்டணி: இந்தச் சூழலில் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிவிட்டார். லைகா நிறுவனம் சஞ்சய் இயக்கும் முதல் படத்தை தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. அக்ரீமெண்ட்டில் விஜய் மகன் சஞ்சய் கையெழுத்து போடும் புகைப்படங்கள் வெளியாகின. இதனையடுத்து சஞ்சய்யின் முதல் படத்தில் யார் ஹீரோ என்ற கேள்வியும் பலரிடம் பலமாக எழுந்திருக்கிறது.
யார் ஹீரோ?: முதல் படத்திலேயே விஜய்யை வைத்து இயக்கினால் அது தேவையில்லாத விமர்சனத்தை பெற்றுத்தரும் என சஞ்சய் யோசித்தாராம். ஏனெனில் ஏற்கனவே தந்தையால்தான் விஜய் வளர்ந்தார் என்ற பேச்சு இருக்கிறது. அதே பெயர் தனக்கும் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறாராம் ஜேசன். இதன் காரணமாக வேறு ஒருவரை ஹீரோவாக வைத்துதான் படம் இயக்கப்போகிறார். அதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வரும்.

விஜய் சேதுபதி: இந்நிலையில் ஜேசன் சஞ்சய் குறித்து விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், "இயக்குநராக வேண்டும் என்பதுதான் சஞ்சய்யின் ஆசையாக இருக்கிறது. ஒருமுறை அவனிடம் நான், 'நீ இயக்குநராக வரும்போது பெரிய சூப்பர் ஸ்டாரை (விஜய்) வைத்தே படம் பண்ணலாம் டா. அவரை வைத்து படம் எடுத்தால் ஹிட் என்ற நிலைமைதானே இப்போது இருக்கிறது என்றேன்.
நோ சொன்ன சஞ்சய்: அதற்கு அவரோ, தாத்தா எனது முதல் பட ஹீரோ அப்பா இல்லை. கண்டிப்பாக விஜய் சேதுபதிதான் என்றார். அதை கேட்கும்போது சந்தோஷமாக இருந்தது. ஏனென்றால் இயக்குநராக வென்ற பிறகு தன்னுடைய அப்பாவை வைத்து படம் எடுக்கலாம் என்ற அவரது நம்பிக்கை எனக்கு பிடித்திருந்தது. ஏனென்றால் அது என்னுடைய ரத்தம்" என்றார்.


Click it and Unblock the Notifications











