பல தடைகள்.. 50 ஆண்டு கனவு.. மகனுக்காக எஸ்.ஏ சந்திரசேகர் வேண்டுகோள்!

சென்னை: தமிழக அரசியல் களத்தில் தனது பயணத்தை தொடங்கி இருக்கும் விஜய், தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுகளில் தனித்து போட்டியிட உள்ளார். தமிழக வெற்றிக்ழகம் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார வாகனத்தில் ரோடு மூலமாக தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரம் ஏப்ரல் 21ந் தேதி முடிவடைய இருக்கும் நிலையில் சென்னையில் தீவிர பிரச்சாரத்தில் விஜய் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் விஜயின் அப்பாவும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தமிழக வெற்றிக்கழகத் தலைவரும், தனது மகனுமான விஜய்க்கு ஆதரவாக வீடியோ ஒன்றை வெளியிட்டு மக்களிடம் ஆதரவு கேட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

Vijay TVK party S A Chandrasekhar

வாக்களிப்பீர்: அதில், அன்பு மகன் உங்கள் தளபதி விஜய், விஜயின் நெஞ்சில் குடியிருக்கும் உறவுகளுக்கு என் வணக்கம். 2026 இன்னும் சில நாட்களில் மாற்றத்திற்கான ஒரு நாள். தமிழ் மக்களுக்கு, தமிழ்நாட்டிற்கு உண்மையான ஒரு மாற்றம். அதற்காக பல பேர் இயங்கிக் கொண்டிருக்கிறோம். அந்த இயக்கத்திற்கு ஊக்கம் கொடுப்பதற்காக தமிழ்நாட்டில் எதிர்காலத்திற்காக உழைக்கக்கூடிய, போராடக்கூடிய ஒரு இளைஞன், எத்தனையோ தடங்கள் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு, தொண்டனாக தலைமை ஏற்று வந்திருக்கிறார்.

ஒரு விரல் புரட்சி: இந்த தேர்தல் வழக்கமாக 5 வருடத்திற்கு ஒருமுறை நடக்கின்ற தேர்தலாக நினைக்காதீர்கள். ஒரு மாற்றம், ஒரு எழுச்சி, மௌன புரட்சி. அந்த புரட்சி மௌனமான ஒரு புரட்சி. 50 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்க வேண்டும் என்று நடக்க வேண்டுமென நினைத்த பலருடை கனவு. அந்த கனவை நிறைவேற்றக்கூடிய நாள் ஏப்ரல் 23ஆம் தேதி. அந்தப் புரட்சி, ஒரு மாற்றம் நடக்க வேண்டும் என்றால், உங்களுக்குள்ளே ஒரு விரல் புரட்சி நடக்க வேண்டும். அந்த ஒரு விரல், விசில் சின்னத்திலேயே நீங்கள் தட்டுகின்ற வாக்கு, மே மாதம் நான்காம் தேதி தமிழகமெங்கும் விசில் சத்தம் கேட்க வேண்டும் என எஸ்வி சேகர் தனது மகன் விஜய்க்காக ஆதரவு கேட்டு பேசி உள்ளார். அந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

Read more about: vijay tvk party விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X