twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுதந்திர நாட்டில் திரைத்துறையினர் அடிமைகளாக வாழும் அவலம் ... எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவேசம்

    ஜனநாயக நாட்டில் திரைத்துறையினருக்கு சுதந்திரம் இல்லை என இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

    |

    Recommended Video

    திரைத்துறையினர் அடிமைகளாக வாழும் அவலம் ... எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவேசம்-வீடியோ

    சென்னை: சுதந்திர நாட்டில் திரைத்துறையினர் மட்டும் அடிமைகளாக வாழும் அவலநிலை உள்ளது என இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் வேதனை தெரிவித்துள்ளார்.

    2016ம் ஆண்டு நாட்டையே உலுக்கிய சுவாதி கொலைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, இயக்குநர் ரமேஷ் செல்வன் நுங்கம்பாக்கம் என்ற தலைப்பில் படம் எடுத்துள்ளார். இவர் ஏற்கனவே உளவுத்துறை, ஜனனம் போன்ற படங்களை எடுத்தவர்.

    இப்படம் தொடர்பாக படக்குழு பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தது. விரைவில் ரிலீசாக உள்ள இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகர் விஷால், இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர், சினேகன் போன்றவர்கள் பங்குபெற்றனர்.

    ஏன் பயம்?

    ஏன் பயம்?

    விழா மேடையில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் பேசுகையில், "முதலில் எதற்கு நாம் பயப்படவேண்டும். ஒரு உண்மை சம்பவத்தை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஏன் பயப்படணும்?

    முடிவு தேவை:

    முடிவு தேவை:

    நமது நாடு ஜனநாயக நாடு. இங்கு பேச்சுரிமை, எழுத்துரிமை எல்லாம் உள்ளது. சுதந்திர நாட்டில் திரைத்துறையினருக்கு மட்டும் சுதந்திரம் இல்லையா , ஏதோ ஒரு அமைப்புக்காக இப்படி மாற்றி கொண்டே போனால் சரியான படைப்பாக இருக்காது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.

    போராடினேன்:

    போராடினேன்:

    நான் எனது இத்தனை ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் 5 படத்திற்காக பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்தேன். ஆனால் நீதிமன்றம் வரை சென்று போராடி, நான் எடுத்த படத்தை அப்படியே மாற்றாமல் ரிலீஸ் செய்தேன்.

    விஷாலிடம் வருவேன்:

    விஷாலிடம் வருவேன்:

    இப்போதும், நான் ஒரு உண்மை சம்பவத்தை வைத்து டிராபிக் ராமசாமி படத்தை எடுத்திருக்கிறேன், ஏதாவது பிரச்சனை என்றால் விஷாலிடம் தான் வருவேன், நீங்கள் எங்கு கூப்பிட்டாலும் தைரியமாக வந்து போராடுவேன். எனக்கு 76 வயது ஆகிறது, ஆனால் பயமில்லை.

    விஷால் வர வேண்டும்:

    விஷால் வர வேண்டும்:

    நமது உரிமைக்காக நாம் கண்டிப்பாக போராட வேண்டும். இதேபோன்று என் பட விழாவுக்கும் விஷால் வரவேண்டும்" என அவர் ஆவேசமாகப் பேசினார்.

    English summary
    While speaking in Nungambakkam Audio launch, director S A Chandrasekar condemned the threaters of freedom of expression.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X