லோகேஷ் கனகராஜ் பட வாய்ப்பை மிஸ் செய்தாரா எஸ்.ஜே.சூர்யா?.. நடிச்சிருந்தா செமயா இருந்திருக்குமே
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் எஸ்.ஜே.சூர்யா. இப்போது இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்தாலும் பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். முக்கியமாக நடிப்பு அரக்கன் என்று பெயர் எடுத்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா 2 ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. தொடர்ந்து இந்தியன் 2, எல்ஐசி உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன. இந்தச் சூழலில் லோகேஷ் கனகராஜின் பட வாய்ப்பை எஸ்.ஜே.சூர்யா மிஸ் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
கோலிவுட்டில் சில படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் இன்றுவரை பலரது ஃபேவரைட் இயக்குநராக இருப்பவர் எஸ்.ஜே.சூர்யா. அஜித்தை வைத்து வாலி படத்தை முதல்முதலாக இயக்கினார். அந்தப் படத்துக்காக அவர் சம்பளமே வாங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அந்தப் படத்தின் மேக்கிங்கிலும், கதையிலும் எஸ்.ஜே.சூர்யாவின் அசுர உழைப்பு வெளிப்பட்டதால் படம் மெகா ஹிட்டானது.

குஷி: வாலி படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு விஜய் ஜோதிகாவை வைத்து குஷி படத்தை இயக்கினார். வாலி படம் போலவே குஷி படமும் மெகா ஹிட்டடிக்க கோலிவுட்டின் கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார். அந்தப் படத்துக்காக முதல்முறையாக லட்சங்களில் அவர் அட்வான்ஸாக வாங்கிய பணத்தில் தனது உதவி இயக்குநர்கள் ஏழு பேருக்கு புது பைக்கை வாங்கிக்கொடுத்தது சமீபத்தில் தெரியவந்து அவருக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்தனர்.
அப்போதே செய்துவிட்ட சூர்யா: இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தின் துணையோடு சைன்ஸ் ஃபிக்ஷன் கதையை எடுப்பது சுலபத்திலும் சுலபமாக மாறிவிட்டது. ஆனால் தொழில்நுட்பம் பெரிதாக வளராத காலத்திலேயே எஸ்.ஜே.சூர்யா நியூ என்ற சைன்ஸ் ஃபிக்ஷன் கதையை எடுத்து அதில் வெற்றியும் கண்டார். அதேபோல் பேரலல் உலகம் என்ற தீமை வைத்துக்கொண்டு அன்பே ஆருயிரே படத்தை எடுத்து அசத்தினார்.
எல்லாம் கனவு: ஒரு இயக்குநருக்கு தனது கதை மேல் எவ்வளவு நம்பிக்கை வேண்டுமோ அதைவிட அதிக நம்பிக்கை தனது திரைக்கதை மீது வேண்டும். அப்படி அவர் எடுத்த படம்தான் இசை. பல வருடங்களுக்கு பிறகு பெரிய பட்ஜெட்டில் அவரே தயாரித்த அந்தப் படம் ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜாவுக்கு இடையே நடந்த மோதலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதாக அப்போது பேச்சு எழுந்தது. படம் முழுக்க விறுவிறுப்பாக கொண்டு சென்று கடைசியில் எல்லாமே கனவு என்று முடித்தது அப்ளாஸை அள்ளியது. அப்படத்துக்காக இசையமைப்பாளர் அவதாரத்தையும் அவர் எடுத்திருந்தார்.
நடிகராக கலக்கிய சூர்யா: கிழக்கு சீமையிலே படத்தில் ஒரு சில சீன்களில் தலை காட்டியவர் நியூ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படிப்பட்ட சூழலில் இறைவி படத்தில் அவர் நடிப்பை பார்த்த ரசிகர்கள் வாய் பிளந்தனர். அப்போது தொடங்கிய அவரது ஃபார்ம் கடைசியாக வெளியான மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா 2 ஆகிய படங்கள் வரை தொடர்கிறது. அவர் நடிக்கும் படங்களில் அசால்ட்டாக தனது நடிப்பின் மூலம் ஸ்கோர் செய்துவிட்டு சென்றுவிடுகிறார் எஸ்.ஜே.சூர்யா. அடுத்ததாக அவரது நடிப்பில் இந்தியன் 2, எல்ஐசி உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன.
பென்ஸ்: இதற்கிடையே தமிழ் சினிமாவின் தற்போதைய மோஸ்ட் வாண்டட் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பென்ஸ் என்ற திரைப்படம் உருவாகவிருக்கிறது. ரெமோ, சுல்தான் படங்களை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். லோகேஷ்தான் அந்தப் படத்துக்கு கதை எழுதியிருக்கிறார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.
மிஸ் செய்த எஸ்.ஜே.சூர்யா?: இந்நிலையில் பென்ஸ் படம் பற்றிய புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது இந்தப் படத்தின் கதை முதலில் எஸ்.ஜே.சூர்யாவிடம் சொல்லப்பட்டதாகவும்; கதை சூர்யாவுக்கும் ரொம்பவே பிடித்துப்போனதாகவும்; ஆனால் கால்ஷீட் பிரச்னையால் இந்தப் படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. அதனையடுத்துதான் ராகவா லாரன்ஸ் படத்தில் கமிட்டாகியிருப்பதாகவும் பேச்சு ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











