எஸ் ஜே சூர்யாவை இயக்கப் போகும் தப்பு தண்டா இயக்குநர் ஸ்ரீகண்டன்

சென்னை: மான்ஸ்டர் வெற்றிக்குப் பின்னர் மற்றுமொரு வெற்றி கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் நடிகர் எஸ்.ஜே சூர்யா, பாலுமகேந்திராவின் உதவியாளரும் தப்பு தண்டா இயக்குநருமான ஸ்ரீ கண்டனிடம் கதை கேட்டிருக்கிறார்.

இயக்குநர் வசந்திடம் உதவியாளராக சினிமா பயணத்தை தொடங்கிய எஸ் ஜே சூர்யா, வாலி, குஷி என அஜித், விஜய்யை வைத்து இயக்கி வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தார். அவரே ஹீரோவானார். சர்க்கரை இனிக்கிற சர்க்கரை என்று சிம்ரனுடன் நடனமாடி பலரின் உள்ளம் கவர்ந்தார். சில ஆண்டுகள் துணை கதாபாத்திரங்கள், வில்லன் என சினிமாவில் வலம் வந்த அவர் மீண்டும் மான்ஸ்டர் படம் மூலம் ஹீரோவானார்.

S J Surya next Thappu Thanda director Srikandan

மான்ஸ்டரில் எலியோடு அவர் விளையாடிய விளையாட்டு குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரையும் கவர்ந்தது படமும் வெற்றி பெற்றது. இப்போது அமிதாப்பச்சன், ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து Tera Yaar Hoon Main என்ற பாலிவுட் படத்தில் நடித்துள்ளார். டிசம்பர் மாதம் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது.

தமிழ் படத்தில் நடிக்க ஹீரோவாக நடிக்க தப்பு தண்டா இயக்குநர் ஸ்ரீகண்டனிடம் கதை கேட்டிருக்கிறாராம் எஸ். ஜே. சூர்யா. இந்த சந்திப்பு ஒரு இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தப்பு தண்டா நல்ல படமாக இருந்தாலும் வந்த சுவடே தெரியாமல் போய்விட்டது காரணம் திரையரங்குகள் அதிகம் கிடைக்கவில்லை. காமெடி திரில்லரான அந்த படம் பாராட்டுக்களைப் பெற்ற படம்.

ஸ்ரீ கண்டன் தனது இரண்டாவது படத்திற்காக எஸ் ஜே சூர்யாவிற்கு கதை செய்திருக்கிறார். நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து பணிபுரிந்தால் வெற்றி அடைய வாய்ப்புகள் அதிகம். இந்த கதையை நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஒத்துக்கொள்வார் அப்படியே ஒத்துக்கொண்டாலும் அது நடிகர் எஸ்.ஜே.சூர்யா முந்திய திரைப்படம் மாதிரி இருக்குமா? அல்லது இயக்குனர் பாலு மகேந்திராவின் படம் மாதிரி இருக்குமா? அல்லது இயக்குனர் ஸ்ரீகண்டனின் வித்யாசமான கதைக்களமாக இருக்குமா என தெரியவில்லை.

புதிய படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நடிகர் எஸ்.ஜே.சூர்யா சார், இயக்குனர் ஸ்ரீகண்டன் சார். உங்களிடமிருந்து ஒரு நல்ல திரைப்படம் வரும் என்று எதிர் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X