அவர்தான் இதிலும் ஹீரோயினாமே? டான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் பிரபல இயக்குனர்!
சென்னை: டான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பிரபல இயக்குனர் வில்லனாக நடிக்கிறார்.
நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது டாக்டர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதை நெல்சன் இயக்கி உள்ளார்.
இவர் கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர். அடுத்து விஜய் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.

பிரியங்கா மோகன்
'டாக்டர்' படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக, பிரியங்கா மோகன் நடிக்கிறார். இவர் கன்னடத்தில் ஒரு படத்திலும் தெலுங்கில் நானி ஜோடியாக, கேங்க் லீடர் படத்திலும் நடித்துள்ளார். ஆக்ஷன் காமெடி கதையை கொண்ட டாக்டர் படத்துக்கும் அனிருத் இசை அமைக்கிறார்.

ஷூட்டிங் முடிந்தது
இந்தப் படத்துக்காக சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்ட, 'செல்லம்மா' பாடல் டிரெண்டானது. இந்தப் படத்தின் ஷூட்டிங் கொரோனாவுக்கு முன் கோவாவில் நடந்து வந்தது. கொரோனாவுக்கு பின் சென்னையில் தொடர்ந்து நடந்து வந்தது. இப்போது இதன் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக சில நாட்களுக்கு முன் படக்குழு அறிவித்தது.

ரகுல் பிரீத் சிங்
இதையடுத்து ரவிகுமார் இயக்கும் அயலான் படத்தில் நடித்து வந்தார், சிவகார்த்திகேயன். இதில் ரகுல் பிரீத் சிங் ஹீரோயின். இஷா கோபிகர், கருணாகரன், யோகி பாபு, பானுப்ரியா முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். அறிவியல் சார்ந்த படமான இதற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

லைகா புரொடக்ஷன்ஸ்
இதன் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது. இதையடுத்து அவர் நடிக்கும் படத்துக்கு டான் என்று டைட்டில் வைத்துள்ளனர். இதை அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். அட்லியிடம் உதவியாளராக பணியாற்றியவர். லைகா புரொடக்ஷன்ஸ், சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கிறது.

எஸ்.ஜே.சூர்யா வில்லன்
அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு கே.எம். பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க இருக்கிறார். டாக்டர் படத்தின் பிரியங்கா மோகன், இதிலும் ஹீரோயினாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











