இயக்குநர் அவதாரம் மீண்டும் எடுக்கும் எஸ்.ஜே.சூர்யா.. அவரே வெளியிட்ட செம அப்டேட்
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் எஸ்.ஜே.சூர்யா. இப்போது இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்தாலும் பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். முக்கியமாக நடிப்பு அரக்கன் என்று பெயர் எடுத்திருக்கிறார். தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திவரும் அவர் இப்போது மீண்டும் இயக்குநராகவிருக்கிறார். கில்லர் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் அப்படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டிருக்கிறார்.
கோலிவுட்டில் சில படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் இன்றுவரை பலரது ஃபேவரைட் இயக்குநராக இருப்பவர் எஸ்.ஜே.சூர்யா. அஜித்தை வைத்து வாலி படத்தை முதல்முதலாக இயக்கினார். அந்தப் படத்துக்காக அவர் சம்பளமே வாங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அந்தப் படத்தின் மேக்கிங்கிலும், கதையிலும் எஸ்.ஜே.சூர்யாவின் அசுர உழைப்பு வெளிப்பட்டதால் படம் மெகா ஹிட்டானது.
குஷி: வாலி படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு விஜய் ஜோதிகாவை வைத்து குஷி படத்தை இயக்கினார். வாலி படம் போலவே குஷி படமும் மெகா ஹிட்டடிக்க கோலிவுட்டின் கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார். அந்தப் படத்துக்காக முதல்முறையாக லட்சங்களில் அவர் அட்வான்ஸாக வாங்கிய பணத்தில் தனது உதவி இயக்குநர்கள் ஏழு பேருக்கு புது பைக்கை வாங்கிக்கொடுத்தது சமீபத்தில் தெரியவந்து அவருக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்தனர்.

அப்போதே செய்துவிட்ட சூர்யா: இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தின் துணையோடு சைன்ஸ் ஃபிக்ஷன் கதையை எடுப்பது சுலபத்திலும் சுலபமாக மாறிவிட்டது. ஆனால் தொழில்நுட்பம் பெரிதாக வளராத காலத்திலேயே எஸ்.ஜே.சூர்யா நியூ என்ற சைன்ஸ் ஃபிக்ஷன் கதையை எடுத்து அதில் வெற்றியும் கண்டார். அதேபோல் பேரலல் உலகம் என்ற தீமை வைத்துக்கொண்டு அன்பே ஆருயிரே படத்தை எடுத்து அசத்தினார். பிறகு நீண்ட வருடங்களுக்கு பிறகு இசை படத்தை இயக்கினார். அதனையடுத்து படங்கள் எதுவும் இயக்காத அவர் நடிகராக கலக்கிக்கொண்டிருக்கிறார்.
நடிப்பு அரக்கன்: அப்படி அவர் ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திவரும் அவர் நடிப்பு அரக்கன் என்று பெயர் வாங்கியிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் இந்தியன் 2, ராயன் ஆகிய திரைப்படங்கள் தமிழில் வெளியாகின. தெலுங்கில் சரிபோதா சனிவாரம், கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் வெளியாகின. இவை அத்தனையும் தோல்வி படங்களாக அமைந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் இயக்குநர்: இதற்கிடையே எஸ்.ஜே.சூர்யா மீண்டும் இயக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்துவந்தனர். சூழல் இப்படி இருக்க கில்லர் என்ற படத்தை தான் இயக்கவிருப்பதாக கூறியிருக்கிறார். இந்நிலையில் அந்தப் படம் குறித்த புதிய அப்டேட்டை வெளியிட்டிருக்கிறார் அவர். அதன்படி, கில்லர் படத்தை கோகுலம் சினிமா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டு சில புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்


Click it and Unblock the Notifications











