S.J.Suryah - ரஜினி சும்மாவே இருப்பார்.. கடைசியில் ஒட்டுமொத்தமாக அள்ளிடுவார்.. புல்லரித்துப்போன எஸ்.ஜே.சூர்யா
சென்னை: S.J.Suryah On Rajini (ரஜினி குறித்து எஸ்.ஜே.சூர்யா) ரஜினி குறித்து எஸ்.ஜே.சூர்யா பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் படம் வெளியானது. கடந்த சில வருடங்களாகவே ஹிட்டுக்கான ரஜினியின் காத்திருப்பை ஜெயிலர் படம் முடிவுக்கு கொண்டுவந்திருக்கிறது. உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிறது. இதன் மூலம் தான் ஒரு வசூல் கிங் என்பதை மீண்டும் அவர் நிரூபித்திருப்பதாக அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் கூறிவருகின்றனர்.

ரஜினியின் அடுத்த படங்கள்: ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் அடுத்ததாக த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. ஜெய் பீம் படம் போலவே இந்தப் படமும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் என தெரிகிறது. இப்படத்தில் முக்கியமான ரோலில் அமிதாப் பச்சன் நடிக்கவிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
தலைவர் 171: ரஜினியின் லைன் அப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் அவரது 171ஆவது படம். ஏனெனில் அந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார். கமல் ஹாசனுக்கு எப்படி விக்ரம் படம் மூலம் பிரமாண்ட வெற்றியை கொடுத்தாரோ அதேபோல் ரஜினிக்கும் கொடுப்பார் என்று திரைத்துறையினர் இப்போதே ஆரூடம் கூறிவருகின்றனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
சந்திரமுகி: இப்படி ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் படுபிஸியாகிவிட்டார். அதேசமயம் தர்பார், அண்ணாத்த ஆகிய படங்களின் தோல்வியால் ரஜினிகாந்த் கரியர் முடிவுக்கு வந்துவிட்டதாக பலரும் கூறினர். இருந்தாலும் அவரைப் பற்றி இப்படி சொல்வது முதன்முறையல்ல. பாபா படத்தின் தோல்வியின்போதும் இப்படித்தான் பலரும் சொன்னார்கள். ஆனால் அடுத்த படமான சந்திரமுகியில் தரமான கம்பேக் கொடுத்தார் என்பது அனைவரும் அறிந்ததே.
எஸ்.ஜே.சூர்யா: இந்நிலையில் சந்திரமுகியில் ரஜினி நடித்தது குறித்து எஸ்.ஜே.சூர்யா பேசியிருப்பது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் அளித்த ஒரு பேட்டியில்,"பாபா படம் தவறாக போன பிறகு ரஜினி முழுக்க தன்னை ரீ ஸ்டார்ட் செய்துகொண்டார். அப்படி ரீ ஸ்டார்ட் செய்த பிறகு அவர் சந்திரமுகி படத்தில் நடித்தார். அது ஹீரோயின் ஓரியண்டட் சப்ஜெக்ட். படம் முழுக்க ரஜினி அமைதியாகவே இருப்பார். ஆனால் கடைசியில் வந்து ஒரு லகலகவை போட்டு ஒட்டுமொத்த கைத்தட்டல்களையும் அள்ளிட்டு போயிடுவார். இதுக்கெல்லாம் தனி தைரியம் வேண்டும்" என்று கூறியிருந்தார். அதனை ரஜினி ரசிகர்கள் பலரும் தற்போது ஷேர் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











