Mark Antony - உச்சம் கொண்டு சென்ற கடவுள் கண்ணை பறித்துவிட்டார்.. மனம் திறந்த எஸ்.ஜே.சூர்யா
சென்னை: Mark Antony (மார்க் ஆண்டனி) மார்க் ஆண்டனி திரைப்பட வெற்றிவிழாவில் எஸ்.ஜே.சூர்யா தனது திரைப்பயணம் குறித்து பேசினார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, சுனில் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் மார்க் ஆண்டனி. ரொம்ப காலமாக ஹிட் கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்த விஷால் இந்தப் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்திருக்கிறார். இதனால் விஷால் ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறார். மேலும் ஆதிக் ரவிச்சந்திரனும் இந்தப் படத்தின் மூலம் கவனம் பெற்றிருக்கிறார்.

சக்சஸ் மீட்: படம் 100 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக விஷால் தெரிவித்திருக்கிறது. சூழல் இப்படி இருக்க நேற்று சென்னையில் மார்க் ஆண்டனி படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது விழாவில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, "மார்க் ஆண்டனி படத்துக்கு நல்ல விமர்சனம், வசூல் கிடைத்திருக்கிறது. அதையெல்லாம் விட சந்தோஷம் அனைவரையும் சிரிக்க வைத்திருப்பது என்பதை நினைத்துதான்.
உறவு தொடரும்: இந்தப் படத்தின் மூலம் விஷாலுக்கும் எனக்குமான உறவு வலுவடைந்திருக்கிறது. நமக்குள் இருக்கும் இந்த அன்பான உறவு எப்போதும் தொடர வேண்டும். அவதூறான பேச்சுக்களால் அது மிஸ் ஆகிவிடக்கூடாது. நாம இன்னும் 2 படங்கள் இல்லை. 20 படங்கள்கூட செய்யலாம். ஸ்க்ரீனில் இன்னொருவருக்கு இவ்வளவு பெரிய ஸ்பேஸ் கொடுத்த உங்களை பார்க்கும்போது எனக்கு 'இவன்தான்டா ஹீரோ' என சொல்ல தோன்றுகிறது.
ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்: சிறந்த நடிகனாக வர வேண்டும் என்பதுதான் எனது ஆசை. ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்தபோது பல வருடங்கள் போடியிருக்கிறேன். 2004ஆம் நியூ படமும், 2005ஆம் ஆண்டு அன்பே ஆருயிரே படமும் நான் ஹீரோவாக நடித்து வெளியாகி பட்டையை கிளப்பின. கோயம்புத்தூரில் அன்றை நிலவரப்படி பெரிய ஸ்டார் படங்கள் ஒன்றரை கோடி வியாபாரமானது. எனது படம் ஒரு கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆனது.

கண்ணை பறித்துவிட்டார்: இப்படி கடவுள் என்னை உச்சத்துக்கு கொண்டு சென்றார். ஆனால் திடீரென கண்களை பறித்துவிட்டு கீழே இறக்கிவிட்டார். பல வருடங்கள் காணாமல் போனேன். நீண்ட இடைவெளிக்கு பிறகு இசை, இறைவி ஆகிய படங்கள் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தேன். இறைவி படத்தின் மூலம்தான் எனது வாழ்க்கை மீண்டும் ஆரம்பித்திருக்கிறது. கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி.
மார்க் ஆண்டனி சாத்தியம்: பல பெரிய இயக்குநரின் படங்களில் நடித்து மாநாடு, இப்போது மார்க் ஆண்டனிவரை வந்திருக்கிறேன். கடவுளிடம் நான் அடிக்கடி, 'என்னை மிகவும் ரசித்த மக்கள் மனதில் இடம்பிடிக்க எனக்கு ஒரு நல்ல படம் கிடைக்காதா?' என்றுதான் கேட்பேன். அது மார்க் ஆண்டனி படத்தின் மூலம் சாத்தியமாகியிருக்கிறது. ரசிகர்கள் எனக்கு கொடுத்திருக்கும் அங்கீகாரத்தை சரியாக பயன்படுத்திக்கொள்வேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











